Categories: அரசியல்

என்.ஆர்.சி சட்டத்திற்கு இடமில்லை: ஜெகன்

தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு ஒரு போதும் ஆந்திராவில் இடமில்லை என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டம், டெல்லிக்கு நகர்ந்து நாடு முழுவதும் பரவியது. இதனால் சிறுபான்மையின மக்களுக்கு ஆதவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Jegan mohan oppose NRC
ஜெகன் மோகன்

இச்சட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பாஜக சார்ப்பில் ஆதரவு பேரணி நடத்தப்பட்டது. ஆனாலும், மாணவர்களின் போராட்டம் வீரியமிக்கதாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக இரு அவையிலும் வாக்களித்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தற்போது பின்வாங்கியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய அதன் தலைவர் ஜெகன் மோகன், தனது அரசாங்கம் தேசிய குடியுரிமை சட்டத்தை ஆந்திராவில் அமல்படுத்த விடாது என தெரிவித்துள்ளார். கடப்பாவில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், சில சிறுபான்மையின நண்பர்கள் என்னை சந்தித்து பேசினர். ஆதலால் எங்களுடைய நிலைப்பாட்டினை தெளிவாக கூறவேண்டும். ஆந்திராவில் என்.ஆர்.சி சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்றார்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெருன்பான்மை வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த ஜெகன் மோகனுக்கு, பிரபல தேர்தல் கள ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் வேலை பார்த்தார். தற்போது இப்புதிய இரண்டு சட்டங்களையும் கடுமையாக எதிர்க்கும் இவர், இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜக அல்லாத 16 மாநில முதலமைச்சர்கள் ஒன்று திரள வேண்டும் என கூறியிருந்தார். அதனை பொருட்டே மேற்கு வங்காள முதலவர் மம்தா, பீகார் மாநில முதல்வர் நிதிஸ் குமார், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரை ஒன்று திரட்டினார். தற்போது ஜெகன் மோகனும் இணைந்திருப்பதால் பிரசாந்த் கிஷோரின் திட்டம் சரியாக நிறைவேறி வருகிறது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்