பெயர் சூட்டு விழா நடத்தி மகனுக்கு அழகு தமிழில் பெயர் வைத்த பாண்டவர் இல்லம் அனு.!

வெளியிட்டது

பாண்டவர் இல்லம் சீரியல் அனு தற்போது தனது மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார். அந்த வீடியோவை சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் போட்டோஷூட் நடத்தி தனது மகனின் புகைப்படத்தை முதல் முறையாக அவர் பகிர்ந்தும் இருக்கிறார். திருமணமாகி 6 ஆண்டுகள் கழித்து மகன் பிறந்துள்ள சந்தோசத்தை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து உள்ளார் அனு. அவருக்கும், குழந்தைக்கும் தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு என்கிற சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரமாக வில்லியாக நடித்து பிரபலமானவர் அனு. இதில் சிறப்பான வில்லத்தனத்தை வெளிப்படுத்தியதால் இவருக்கு அடுத்தடுத்தநாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த தொடராக சன் டிவியில் பாண்டவர் இல்லம் என்கிற தொடரில் ஆரம்பத்தில் வில்லியாக நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெயர் சூட்டு விழா நடத்தி மகனுக்கு அழகு தமிழில் பெயர் வைத்த பாண்டவர் இல்லம் அனு.! 1

இந்த சீரியலிலும் வில்லியாக நடிக்க ஆரம்பித்த இவர் இவர் மனம் திருந்தி பாசிட்டிவ் ரோலாக மாறுவது போல கதை நகர்ந்தது. அதன் பின்னர் இவருக்கும் ரசிகர் பட்டாளம் பெருகத் தொடங்கியது. இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த காரணத்தால் சீரியலில் இருந்து சமீபத்தில் விலகி அதிர்ச்சி கொடுத்திருந்தார் அனு. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆறு வருடங்களுக்குப் பிறகு அனு கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்து இருந்தார். 7 மாதமாக இருக்கும் வளைகாப்பு புகைப்படங்களை சமீபத்தில் அனு வெளியிட்டிருந்தார். எந்த ஆடம்பரமும் இல்லாமல் வீட்டிலேயே வைத்து இவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த நிலையில் அனுவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்து இருந்தது. பிரசவ அறையில் வலியால் துடித்து கொண்டிருந்த போது கணவர் எப்படி தன்னை பார்த்துக்கொண்டார் என்ற வீடியோவை வெளியிட்டு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தார் அனு.

அதே போல தற்போது youtube சேனல் ஒன்றையும் தொடங்கியுள்ள அவர், இன்று ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அதில் தனது மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தியதையும், பின்னர் போட்டோஷூட் நடத்தியதையும் பகிர்ந்து இருக்கிறார். வானம் போல் வந்தாய் என் வாழ்வில், மலரை போல் விரிந்தாய் என் கையில், மழை போல் நனைந்தாய் என் நெஞ்சில், என் “வான் வியன்” என் உலகம், உங்கள் அனைவருக்கும் திரு.வான் வியனை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறேன்! தங்கபட்டனிக்கு உங்கள் அனைவரின் அன்பும் ஆசியும் வேண்டும் என்று மகனின் புகைப்படத்தை பகிர்ந்து அழகான கவிதை ஒன்றையும் எழுதியுள்ளார். நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.! 

Youtube Video Embed Code Credits: Anu Vignesh

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்