பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா மகளுக்கு பிறந்த நாள்.! கேக் வெட்டி கொண்டாடிய ஜீவா.! இதோ வீடியோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட்டின் மகளுக்கு இன்றைக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. வீட்டிலேயே கேக் வெட்டி அவர் தனது மகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்களும், வெங்கட்டின் மகளுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.பழனியில் பிறந்து வளர்ந்தவர் வெங்கட். இவர் நடிக்கும் ஆசையால் சென்னைக்கு வந்து சிறிய வேடங்களில் நடித்த தொடங்கினார். கனா காணும் காலங்கள் என்கிற நாடகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வெங்கட். அதன் பின்னர் இவர் ஆண்பாவம், மாயா, புகுந்த வீடு போன்ற பல சீரியல்களில் நடித்தார். பின்னர் தெய்வம் தந்த வீடு என்கிற நாடகத்தின் மூலமாக இவருக்கு ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. பலராலும் அறியப்பட்ட நபராக மாறிப் போனார் வெங்கட். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா மகளுக்கு பிறந்த நாள்.! கேக் வெட்டி கொண்டாடிய ஜீவா.! இதோ வீடியோ..! 1
அதன் பின்னர் இவர் ஜீ தமிழுக்கு சென்ற அவர் மெல்ல திறந்தது கதவு என்கிற சீரியலில் நடித்து வந்தார். பின்னர் மீண்டும் விஜய் டிவிக்கே திரும்பிய அவர் நினைக்கத் தெரிந்த மனமே என்ற நாடகத்தின் நடித்தார். மேலும் ஜோடி நம்பர் ஒன் சீசன் 10-லும் அவர் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். அதன் பின்னர் அவருக்கு 2018 ஆம் ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது வெங்கட் என்கிற பெயரையே மறந்து அவரை ஜீவா என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும் அளவிற்கு இந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போயிருக்கிறார் வெங்கட். மேலும் குற்றம் 23, செய், திருமணம் போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைப்படி ஜீவாவிற்கும் அவரது அண்ணன் மூர்த்திக்கும் சண்டை ஏற்படுகிறது. இதனால் ஜீவா தற்போது அண்ணன் தம்பிகளை விட்டு பிரிந்து மாமனார் உடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்க பலரும் ஜீவாவின் இந்த செயலுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் தான் கல்லூரி சென்று படித்திருந்த போதிலும் அண்ணனுக்கு உதவியாக இத்தனை ஆண்டுகளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை கவனித்துக் கொண்டு வந்த ஜீவாவை அண்ணன் தம்பிகள் அனைவரும் சேர்ந்து அவமானப்படுத்துகிறார்கள். தொடர்ந்து அவமானங்களை சந்தித்து வரும் அவர் தற்போது அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். மேலும் தனது அண்ணனையே எதிர்த்து பேச தொடங்கி இருக்கிறார். இதனால் பலரும் ஜீவாவிற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஜீவா கதாபாத்திரத்தில் ஒன்றிப்போன வெங்கட்டின் தனிப்பட்ட வாழ்க்கை பொருத்தவரை அவருக்கு அஜந்தா என்கிற மனைவியும் தேஜஸ்வினி என்கிற மகளும் இருக்கிறார்கள். தேஜஸ்வினிக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. நண்பர்கள் அனைவரையும் அழைத்து அவர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி அந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிந்திருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்