பாக்கியாவுக்கும் பழனிசாமிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறேன்.! கோபியை அலறவிட்ட பாட்டி.!

பாக்கியலெட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தற்போது பழனிச்சாமியின் தாயாரை தேடி செல்கிறார் கோபி. அங்கு சென்று பாக்யாவுடன் பழனிச்சாமி பேசும் விஷயத்தை பழனிச்சாமியின் தாயாரிடம் கூற, அவரோ உங்களுக்குள் தான் எல்லாம் முடிந்து விட்டதே, அப்புறம் எதற்கு நீங்கள் அவரை பொண்டாட்டி என்று சொல்லிக்கொண்டு இங்கு வருகிறீர்கள் என்று கூறி அனுப்பி விடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான பல கட்டங்களுடன் நடந்து வருகிறது. தற்போது கோபியின் மூத்த மனைவியாக இருக்கும் பாக்யா ஆங்கில வகுப்பிற்கு சென்று கொண்டிருக்கிறார். அங்கு பழனிச்சாமி என்பவருடன் நட்பாக பழகி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியாவுக்கும் பழனிசாமிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறேன்.! கோபியை அலறவிட்ட பாட்டி.! 1

விளம்பரம்

பாக்கியாவை விவாகரத்து செய்த போதிலும் கோபிக்கு அவர் மீது ஒரு தனிப்பட்ட அக்கறை இருந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக அவர் எந்த ஆண்களுடனும் பேசக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் கோபி. ஆனால் பாக்யாவும் பழனிச்சாமியும் நெருங்கி பழகுவது கோபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த நிலையில் பாக்யாவைத் தேடி கோபி ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பிற்கு செல்கிறார். அப்போது அங்கு பாக்யாவும் பழனிச்சாமியும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். அதில் பழனிசாமி பாக்யாவிடம் ஐ லவ் யூ என்று ஆங்கிலத்தில் கூற அதை கோபி பார்த்து விடுகிறார். இந்த விஷயம் பற்றி பழனிச்சாமியின் தாயாரிடம் பேசுவதற்காக கோபி பழனிச்சாமி வீட்டிற்கு செல்கிறார். அப்போது அவரது தாயாரிடம் இந்த விஷயத்தைப் பற்றி கூறுகிறார்.

தொடர்புடையவை  பட் சாருக்கு சின்ன வீடு இருக்கு.. சுனிதா சொன்ன ரகசியம்..அதிர்ச்சியில் உறைந்த கிரேஸ் | Cook With Comali Season 3

பாக்கியாவுக்கும் பழனிசாமிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறேன்.! கோபியை அலறவிட்ட பாட்டி.! 3

விளம்பரம்

உங்கள் மகன் ஒரு பொண்ணு பின்னாடி சுற்றுகிறான் என்று சொல்ல, அதற்கு பாட்டி அது நல்லது தானே என்று பதில் கூறுகிறார். மேலும் உங்க பையன் என் மனைவி பின்னாடி சுற்றுகிறான் என்று கூறுகிறார். அதற்கு பழனிச்சாமியின் தாயார், “உங்களுக்குள் தான் எல்லாம் முடிந்து விட்டதே அப்புறம் என்ன பொண்டாட்டி”? என்று கோபியின் முகத்தில் அடித்தார் போல் கேள்வி கேட்கிறார். இதனால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கோபி முழித்துக் கொண்டிருக்கிறார் நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment