வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட தங்க மயில்.! கோமதிக்கு வந்த சந்தேகம்..! ப்ரோமோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வீட்டிற்குள் திருடன் புகுந்து விட்டதால் நகைகள் அனைத்தையும் எடுத்து வங்கியில் உள்ள லாக்கரில் பத்திரமாக வைக்க வேண்டும் என தங்கமயில் கூறுகிறார். இதனால் வாயை கொடுத்து அவர் மாட்டிக் கொள்கிறார். தங்கமயில் போட்டு வந்த நகை அனைத்தும் கவரிங் நகை என்கிற உண்மை தெரிய வருமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட தங்க மயில்.! கோமதிக்கு வந்த சந்தேகம்..! ப்ரோமோ..! 1

பாண்டியனின் மூத்த மகனாக இருக்கும் சரவணன் தங்கமயில் என்பவர் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் தங்கமயில் அணிந்து வந்த நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள். பாண்டியன் குடும்பத்தை ஏமாற்றி கவரிங் நகைகளை போட்டு தங்கமயில் தாயார் திருமணம் செய்து வைக்கிறார். இந்த நிலையில் பாண்டியன் வீட்டிற்கு திருடர்கள் வருகின்றனர். இதனால் பயம் கொள்ளும் கோமதியின் நகைகளை பேங்க் லாக்கரில் வைக்க முடிவெடுக்கிறார்.

தங்கமயில் தன்னுடைய நகைகளை தன்னுடைய தாயார் வீட்டு பேங்க் லாக்கரில் வைக்க போவதாக கூறுகிறார். ஆனால் பாண்டியன், கோமதியிடமும் லாக்கர் இருக்கிறது. எனவே நீ கோமதி லாக்கரிலேயே வைத்துக் கொள்ளலாம் என கூறுகிறார். இதனால் தங்கமயில் பயத்தில் உறைந்து போகிறார். மேலும் அங்கு நகைகளை உரசி பார்ப்பார்களா என தங்கமயில் கேட்க, கோமதிக்கு சந்தேகம் வருகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்