விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முத்து மற்றும் மீனாவுக்கு இடையே பிரச்சனை எழுந்த நிலையில், மீனா வீட்டில் இருந்து காணாமல் போய்விடுகிறார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சிட்டி முத்துவுக்கு எதிராக மீனாவின் தம்பி சத்யாவுக்கு கொம்பு சீவி விடுகிறார். மீனா காணாமல் போனதற்கு முத்து தான் காரணம் என போலீசில் கம்பளைண்ட் கொடுக்குமாறு சிட்டி சத்யாவை ஏற்றி விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முத்துவின் நண்பர் ஒருவர் தனது அண்ணன் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க முத்து வீட்டிற்கு வருகிறார். அப்போது பேசும் முத்து, திருமணத்திலிருந்து எப்படியாவது தப்பித்து ஓடிவிடு. இல்லை என்றால் உன் அண்ணன் காணாமல் போனால் உன் தலையில் கட்டி வைத்து விடுவார்கள் என்று கூறுகிறார். இதைக் கேட்கும் மீனா மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகிறார். முத்து இத்தனை நாட்களாக தன்னுடன் விருப்பமில்லாமல் வாழ்ந்து வருவதாக அவர் நினைத்துக் கொள்கிறார். இதனால் வீட்டில் சண்டை எழுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீனா வீட்டிலிருந்து காணாமல் சென்று விடுகிறார்.

அவரை தேடிக் கொண்டிருக்கும் முத்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்கிறார். அதற்கு முன்பாகவே மீனாவின் தம்பி சத்யா போலீஸ் ஸ்டேஷனில் மீனா காணாமல் போனதற்கு முத்து தான் காரணம் என சிட்டியின் தூண்டுதல் பெயரில் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது அங்கு இருவருக்கும் சண்டை வருகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television