ஐஷுவுடன் வீட்டில் இருந்து வெளியேறிய கண்ணன்.! மூன்றாக உடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கண்ணன் ஐஸ்வர்யாவை பேச்சைக் கேட்டு அவரின் பின்னாலேயே ஓடிவிட்டார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே நிலை குலைந்து போயிருக்கிறது. மேலும் மூர்த்தியும் தானும் வீட்டை விட்டு வெளியே போகப் போவதாக கதிரிடம் கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார். ஒற்றுமையாக இருந்த குடும்பம் யார் கண் பட்டுவிட்டது என்று தெரியவில்லை சிதைந்து மூன்று துண்டு, நான்கு துண்டுகள் ஆகிவிட்டது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் ஜீவா பாண்டியன் ஸ்டோர் தொடரிலிருந்து வெளியேறிவிட்டார். தற்போது கடைசி தம்பியாக இருக்கும் கண்ணன் மனைவி ஐஸ்வர்யாவும் மூர்த்தி மற்றும் கதிரிடம் பயங்கரமாக சண்டை போடுகிறார். கண்ணன் என்ன சின்ன குழந்தையா? அவரை சின்ன குழந்தை போல் நடத்துகிறீர்கள் கைநீட்டி அடிக்கிறீர்கள்? இதே போல் உங்களால் கதிரையும் ஜீவாவையும் செய்ய முடியுமா? என்று கோபமாக கேட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஷுவுடன் வீட்டில் இருந்து வெளியேறிய கண்ணன்.! மூன்றாக உடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.! 1
இன்றைய எபிசோடில் கோபத்துடன் வீட்டிலிருந்து பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு கிளம்பும் ஐஸ்வர்யா கண்ணனை பார்த்து உனக்கு நான் முக்கியமா? இல்லை உங்களது அண்ணன் குடும்ப முக்கியமா? நான் முக்கியம் என்றால் என்னுடன் வா இல்லை இங்கே இருந்து கொள் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லி மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறார். அவர்களை தடுக்க தனம் எவ்வளவோ முயற்சி செய்கிறார். ஆனால் ஒரு கணம் யோசித்த கண்ணன் தனது அண்ணி மற்றும் அண்ணனிடம் வந்து மன்னிப்பு கேட்டுவிட்டு ஐஸ்வர்யா பின்னால் சென்று விடுகிறார். இதனால் மூர்த்தி, கதிர், முல்லை, தனம் என அனைவரும் நிலை குலைந்து போயிருக்கின்றனர். மேலும் தனத்திடம் பேசும் கதிர் அவர்களுக்கு எப்படி அவர்களுடைய சுயமரியாதை முக்கியமோ? அதேபோல எங்களுக்கு உங்கள் சுயமரியாதை முக்கியம். அவர்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்வார்கள் நீங்கள் உள்ளே செல்லுங்கள் என்று கதிர் தனத்தையும் மூர்த்தியையும் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் செல்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  'சிறகடிக்க ஆசை' சீரியலில் எதிர்பார்க்காத வருகை..! இனி பாட்டியின் ஆட்டம் ஆரம்பம்..!

ஐஷுவுடன் வீட்டில் இருந்து வெளியேறிய கண்ணன்.! மூன்றாக உடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.! 3
நேராக தனது சித்தியான கஸ்தூரி அத்தாட்சி வீட்டிற்கு செல்லும் ஐஸ்வர்யா, தனது பாட்டி வீட்டின் சாவியை கேட்கிறார். அந்த வீட்டில் சில காலம் நாங்கள் தங்கியிருக்க போகிறோம் என்று சொல்லி அந்த வீட்டின் சாவியை வாங்கிக் கொண்டு புறப்படுகிறார் ஐஸ்வர்யா. இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மற்றொருபுறம் மூர்த்தி கதிரிடம் சிடுசிடுவென எரிந்து விழுகிறார்.சாப்பாடு வாங்கிக் கொண்டு வரும் கதிர், அனைவரையும் சாப்பிடுமாறு சொல்ல, மூர்த்தியோ நான் இனி சாப்பிட போவதில்லை, நீயும் வீட்டை விட்டு வெளியே போவது என்றால் போ என்று கோபமாக கூறுகிறார். மூர்த்தியின் இப்படியான பேச்சை எதிர்பார்க்காத கதிர் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். பின்னர் இது உன் வீடு நீ எதற்காக வெளியில் போக வேண்டும் நானும் தனமும் வீட்டை விட்டு வெளியே போகிறோம் என்று சொல்லி கதிரிடம் தேவையில்லாமல் சண்டை போடுகிறார் மூர்த்தி. பின்னர் முல்லையும் கதிரும் சேர்ந்து மூர்த்தியை சமாதானம் செய்கின்றனர். ஒற்றுமையாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மூன்றாக உடைந்ததை பார்த்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

தொடர்புடையவை  ஸ்கூல் படிக்கும் போது உங்க Crush யாரு? ஹவுஸ்மேட்ஸிடம் பிக்பாஸ் கேட்ட கேள்வி | BiggBoss Ultimate

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment