விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான முதல் ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருந்த ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. நான்கு அண்ணன் தம்பிகளின் கதையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இல்லத்தரசிகளின் பலரின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக இருந்து வந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கதைப்படி நான்கு அண்ணன் தம்பிகளும் மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளனர். அவர்களுக்குள் இருந்த மனக்கசப்புகள் அனைத்தும் நீங்கி விட்டது. மேலும் அவர்கள் நினைத்தது போல புதிய வீடு ஒன்றையும் கட்டி உள்ளனர். இதற்கிடையில் ஜீவாவின் மாமனார் மருத்துவமனையில் கண்விழித்து தன்னை குத்தியது பிரசாந்த் என்று கூற, பிரசாந்தும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விட்டார். கதிரும் ஜீவாவும் மீண்டும் வீட்டிற்கே திரும்பி இருக்கின்றனர். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. இதன் இரண்டாம் பாகத்தின் ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
முதல் பாகத்தில் மூர்த்தியாக நடித்த ஸ்டாலினே இரண்டாவது பாகத்திலும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடிக்கிறார். மேலும் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்த இரண்டாவது பாகம் அப்பாவிற்கும் மூன்று மகன்களுக்கும் இடையே நடக்கும் கதை என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..!
YouTube Video Embed Code Credits: Vijay Television
