பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.! இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு.!

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த தொடரில் நடித்து வரும் ஒரு முக்கிய கதாபாத்திரம் தற்போது தொடரில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு என்று பல ரசிகர்கள் இருக்கின்றனர். குடும்பப் பாங்கான தொடரை எடுப்பதில் விஜய் டிவி முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி என குடும்பத்தின் அருமையை சொல்லும் தொடர் கதைகளை எடுத்து வருகிறது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து தற்போது முக்கிய பிரபலம் ஒருவர் வெளியேறியிருக்கிறார். அந்த தகவல் கிடைத்திருக்கிறது தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து ஏதாவது ஒரு விலகல் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.! இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு.! 1

ஆரம்பத்தில் கண்ணனுக்கு ஜோடியாக வைஷாலி என்கிறவர் நடித்து வந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு தீபிகா நடித்து வந்தார். பின்னர் அவரும் மாற்றப்பட்டு தற்போது சாய் காயத்ரி நடித்து வருகிறார். அடுத்ததாக முல்லை கதாபாத்திரத்தில் சித்து இறந்துவிட்ட காரணத்தினால் காவியா அறிவுமணி நடித்து வந்தார். பின்னர் அவரும் விலகி விட்டதால் தற்போது லாவண்யா நடித்து வருகிறார். அடுத்ததாக மூர்த்தியின் தாயாக நடித்து வந்தவரின் கதாபாத்திரத்தை திடீரென முடித்திருந்தனர். அவரும் இந்த நாடகத்தில் இருந்து விலகி பாக்கியலட்சுமி நாடகத்திற்கு சென்று விட்டார். பின்னர் மூர்த்திக்கு மாமா கதாபாத்திரத்தில் வந்த நெல்லை சிவாவும் இறந்து விட அந்த கதாபாத்திரத்தில் தற்போது இன்னொருவர் நடித்து வருகிறார்.

தொடர்ந்து இதுபோல நாடகத்திலிருந்து விலகல்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆரம்பித்து சுமார் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட காரணத்தினால், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் நடிகர்கள் சீரியலில் இருந்து விலக ஆரம்பித்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது முல்லையின் அக்காவான மல்லி என்பவரின் மகனாக, பிரசாந்த் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் வசந்த் நடித்து வந்திருந்தார். இவர் இந்த சீரியலில் வில்லனாக நடித்து வந்தார். தற்போது அவர் இந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதிலாக மகேஷ் சுப்ரமணியம் என்பவர் பிரசாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த தகவலை மகேஷ் சுப்ரமணியமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உறுதி செய்து இருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்