எங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ! புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்த ராம் சரண்.!

தெலுங்கு உலகின் முண்ணனி நடிகர்களில் ஒருவர் ராம்சரண். இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். மாவீரன் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். கட்டுகோப்பான உடலும், திறமையான நடிப்பாலும் தெலுங்கு மட்டுமல்லாது தமிழிலும் பல ரசிகர்களை கவரந்துள்ளார் ராம்சரண். சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் கூட போலீஸாக இவர் நடித்தது பெரிய வரவேற்பை பெற்று இருந்தது. ராம் சரணுக்கும், தொழில் முனைவோராக உள்ள உபாசனாவுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தெலுங்கு திரையுலகம் கொண்டாடும் க்யூட் தம்பதிகளாக இருவரும் வலம் வருகின்றனர். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இது குறித்து இவரது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டே வந்தனர்.

எங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ! புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்த ராம் சரண்.! 1

விளம்பரம்

இந்தநிலையில் ராம் சரணின் மனைவி சமீபத்தில் ஜக்கி வாசுதேவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஜக்கியிடம் அவர் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில் தனக்கும் கணவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை, என்னுடைய RRR (relationship, reproduce, role) உறவுகள், குழந்தை பெற்றுக் கொள்ளும் திறன், வாழ்க்கையில் எனது பங்கு குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர் என்று தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்த சத்குரு குழந்தை பெற்றுக் கொள்ள உங்களுக்கு தகுதி இருந்தும் நீங்கள் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றால் உங்களுக்கு விருது தருகிறேன். உண்மையில் நிறைய இளம் பெண்களுக்கு நான் இது போல விருது அளித்துள்ளேன், தகுதி இருந்தும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்தால் அந்த முடிவை நான் பாராட்டுவேன் என்று கூறியிருந்தார். இப்போதைக்கு நாம் பூமிக்கு செய்யும் சேவை இதுதான் என்று பதிலளித்தார்.

தொடர்புடையவை  வெளியான முதல் நாளே நல்ல வசூல்..! Mariselvaraj-ன் வாழை படத்தின் முதல் நாள் வசூல் விபரம் இதோ..!

எங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ! புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்த ராம் சரண்.! 3

விளம்பரம்

மனித இனம் ஒன்றும் அழிந்துவிட போவதில்லை, அளவுக்கு அதிகமாகவே இருக்கிறோம், எனவே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத பெண்களை வரவேற்க வேண்டும் என்று ஜக்கி கூறியிருந்தார். ஏற்கனவே இது குறித்து பேசிய ராம்சரண் சிரஞ்சீவியின் வாரிசாக மக்களை மகிழ்விக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.எனக்கென்று சில இலக்குகள் இருக்கின்றன. மனைவி உபாசனாவுக்கும் இலக்குகள் இருக்கின்றது. குழந்தை பிறந்துவிட்டால் இலக்கிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆகையால் நாங்கள் தற்போது குழந்தைகள் பெற்றுக் கொள்ளவில்லை, சில வருடங்கள் கழித்து இது குறித்து யோசிப்போம் என்று விளக்கமளித்திருந்தார்.

எங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ! புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்த ராம் சரண்.! 5ஆனால் தற்போது ராம் சரண் விரைவில் அப்பா ஆக போவதாக ராம் சரணின் தந்தை நடிகர் சிரஞ்சீவி ட்விட்டரில் அறிவித்துள்ளார். அனுமாரின் ஆசியால் எனது மகன் ராம் சரணும், மருமகள் உபாசனாவும் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள போவதில்லை என்ற முடிவெடுத்த ராம் சரணின் மனைவி தனது முடிவை மாற்றி கொண்டுள்ளதாக தெரிகிறது. அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவரது மாமனார் சிரஞ்சீவி உறுதிப்படுத்தி இருப்பதால் ராம் சரணனின் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இந்த தகவலை ராம் சரணும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கோலாகலமாக நடைபெற்ற DON பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி பேச்சுலர் பார்ட்டி..! கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்..!

எங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ! புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்த ராம் சரண்.! 7

விளம்பரம்

Leave a Comment