நடிகர் சரத்குமார் மற்றும் அமிதாஸ் பிரதான் ஆகியோர் இணைந்து தற்போது நடித்துள்ள படம் தான் “பரம் பொருள்”. இந்த படத்தின் டீசரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர் சிலை கடத்தலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. vip படத்தில் வில்லனாக நடித்த அமிதாஸ் பிரதான் என்பவர் சரத்குமாருடன் இணைந்து இந்த கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நாயகனாக இருந்து தற்போது பல குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் சரத்குமார். அவர் தற்போது தன்னுடைய அடுத்த படமாக பரம்பொருள் படத்தில் நடித்திருக்கிறார். இவரும் அசோக் செல்வனும் இணைந்து கடைசியாக நடித்திருந்த “போர்த்தொழில்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது அதுபோலவே அடுத்த படத்திலும் இருவர் காம்பினேஷன் இணைந்து இருக்கின்றனர். போர்த்தொழில் படம் சைக்கோ கொலையாளியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில், இந்த படம் சிலை கடத்தலை மையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சி அரவிந்த்ராஜ் என்ற இயக்குனர் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். விஐபி படத்தில் வில்லனாக நடித்திருந்த அமிதாஸ் பிரதான் மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து சிலை கடத்தலில் ஈடுபடுபவர்களை தேடி பயணம் செய்கின்றனர். அப்போது அங்கு நடக்கும் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. போர்த் தொழில் படத்தில் வருவது போல நேர்மையான போலீஸ் அதிகாரியாக இல்லாமல் மாறுபட்ட வேடத்தில் சரத்குமார் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. சமீப காலமாக தமிழகத்தில் சிலை கடத்தல் பிரச்சினை தொடர்ந்து வரும் நிலையில் தற்போது அந்த கதையை மையமாக வைத்து இந்த கதை உருவாகியிருக்கிறது. கடத்தப்படும் சிலைகளை போலீசார் மீட்டு கொண்டு வரும் பொழுது அதை ஆய்வு செய்யும் அதிகாரியாக அமிதாஸ் பிரதான் நடித்திருக்கிறார்.
இவருக்கும் சரத்குமாருக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: U1 Records