‘பரிதாபங்கள்’ சுதாகர் மகன் செழியனின் முதல் பிறந்தநாள்.! கோலாகலமாக கொண்டாடிய சுதாகர்.!

வெளியிட்டது

பிரபல யூடியூபராக இருக்கும் ‘பரிதாபங்கள்’ சுதாகர் என்று தனது மகனின் முதல் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. youtubeஐ கலக்கி வரும் இரண்டு நபர்கள் தான் கோபி மற்றும் சுதாகர்.

'பரிதாபங்கள்' சுதாகர் மகன் செழியனின் முதல் பிறந்தநாள்.! கோலாகலமாக கொண்டாடிய சுதாகர்.! 1

சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த இவர்கள் திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தவர்கள். பின்னர் சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக சில தொலைக்காட்சிகளில் பங்கெடுத்து காமெடிகள் செய்து வந்தனர்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிக்கு சென்ற அவர்கள், அங்கு தேர்வாகாமல் வெளியேறினர். அதன் பின்னர் ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ என்கிற youtube சேனல் ஒன்றில் சேர்ந்தவர்கள் காமெடி செய்து கலக்கி வந்தனர்.

பின்னர் அந்த சேனலில் இருந்தும் வெளியேறி ‘பரிதாபங்கள்’ என்கிற தனி யூடியூப் சேனலை தொடங்கிய அவர்கள், தற்போது தொடர்ந்து காமெடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

வீடுகளில் நடக்கும் சிறு சிறு கலாட்டாக்கள், திருமண வீடுகள், பள்ளி, கல்லூரிகள், தேர்வுகள் என அனைத்தையும் கன்டென்ட் ஆக்கி வருகின்றனர்.

இதனால் இவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ‘பரிதாபங்கள்’ சேனலில் பணியாற்றி வரும் கோபி, சுதாகர், டிராவிட் உள்ளிட்ட அனைவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து தற்போது சுதாகர் தனது மகன் செழியனின் முதல் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

பலரும் சுதாகரின் மகன் செழியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்