‘பசங்க’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் ஸ்ரீராம் ஹீரோவாக நடிக்கும் திரில்லர் கதையான ‘எக்ஸிட்’ படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு இரவில் காட்டுக்குள் சைக்கோவிடம் மாட்டிக் கொள்ளும் இளைஞர்களின் கதையை மையமாக வைத்து இந்த டீசர் வெளியாகி இருக்கிறது. ‘பசங்க’ படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீராம் பின்னர் இவர் ‘கோலி சோடா’, ‘பாபநாசம்’, ‘வஜ்ரம்’, ‘அடுத்த சாட்டை’, ‘சாகா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். திறமையான நடிகராக இருந்த போதிலும் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைவாகத்தான் கிடைத்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் ஸ்ரீராம். அந்த வகையில் தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் தான் ‘எக்ஸிட்’ இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான கதை அம்சத்துடன் கூடிய திரில்லர் கதையாக இருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷாஹீன் இயக்கி இருக்கிறார். ப்ளூம் இன்டர்நேஷனல் சார்பில் வேணுகோபாலகிருஷ்ணன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் சைக்கோவாக பிரபல மலையாள நடிகர் விஷால் நாயர் நடித்திருக்கிறார். மனித வடிவிம் இருக்கும் மிருகம் போல இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஷால் நாயர்.
இந்த டீசரில் காட்டுக்குள் நான்கு இளைஞர்கள் செல்கின்றனர். அவர்கள் அங்கு பாழடைந்த வீட்டில் சைக்கோ தனங்கள் முற்றி மிருகம் போல மாறி இருக்கும் நபரிடம் மாட்டிக் கொள்கின்றனர். அவரோ நான்கு கால்களில் நடப்பார். பேசமாட்டார். மனித மாமிசத்தை கடித்து தின்பது போன்ற கொடூரத்தின் உச்சமாக இருக்கிறார். பின்னர் என்ன நடந்தது? இளைஞர்கள் அவரிடம் இருந்து எப்படி தப்பித்தார்கள்? என்பது குறித்த கதையாக இது இருக்கிறது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் பிப்ரவரி 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அந்த டீசரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Saina Movies