பிக்பாஸ் டைட்டிலை தனது குருநாதருக்கு சமர்ப்பித்த அர்ச்சனா.! அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ஒரு வாரம் கழித்து பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னர் அர்ச்சனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றே போட்டு இருக்கிறார். அதில் தனது குருநாதருக்கு தனது வெற்றியை காணிக்கையாக்குவதாக அறிவித்துள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கை ஆரம்பித்து, பின்னர் நடிகையாக உயர்ந்தவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். ஆரம்பத்தில் பல தொலைக்காட்சிகளில் விஜேவாக பணியாற்றி வந்த அவருக்கு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி சீசன் 2’ சீரியலில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் சீரியலே வில்லி கதாபாத்திரம் என்றாலும், அதை மறுக்காமல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் அர்ச்சனா.

பிக்பாஸ் டைட்டிலை தனது குருநாதருக்கு சமர்ப்பித்த அர்ச்சனா.! அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ.! 1
ஒரு கட்டத்தில் சீரியல் பல நாட்களாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், தான் படங்களில் கவனம் செலுத்த இருப்பதாக கூறி சீரியலை விட்டு விலகி இருந்தார். சீரியல் ஏற்கனவே இரண்டு வருட காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நாள் போகும் என தெரியாது, எனவே நான் சீரியலில் இருந்து விலகுகிறேன் என அறிவித்திருந்தார். அதன் பின்னர் அவர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். ‘டிமாண்ட் காலனி’ போன்ற படங்களிலும் அவர் குறிப்பிட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் அவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 7ல் 30 நாட்களுக்கு பின்னர் வைல்ட் கார்டு என்டியாக உள்ளே சென்ற அவர், இதுவரை பிக் பாஸ் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு வைல்டு கார்டில் சென்று டைட்டிலையும் வென்றிருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  உடல் எடை குறைந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன ரோபோ ஷங்கர்.! Recent Photo இதோ.!

பிக்பாஸ் டைட்டிலை தனது குருநாதருக்கு சமர்ப்பித்த அர்ச்சனா.! அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ.! 3
அர்ச்சனாவின் இந்த வெற்றி வெளியில் பலராலும் விமர்சிக்கப்பட்டிருந்தது. அர்ச்சனா பிஆர் டீம் மற்றும் பாட் போன்றவைகளை வைத்து தனது வாக்கை அதிகரிக்க செய்து வெற்றி பெற்றதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. பிக் பாஸ் வீட்டில் உள்ளேயும் அர்ச்சனா பற்றி இவ்வாறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், பலமுறை அவர் இதற்கு விளக்கம் அளித்திருந்தார். இருந்தபோதிலும் அர்ச்சனா மீதான விமர்சனம் தொடர்ந்து கொண்டே இருந்தது. டைட்டிலை அர்ச்சனா வென்ற பின்னர் இது உறுதியானது. இருப்பினும் இந்த விமர்சனங்களை எல்லாம் பின்தள்ளி அர்ச்சனா தனது வெற்றியை கொண்டாடி வருகிறார்.

பிக்பாஸ் டைட்டிலை தனது குருநாதருக்கு சமர்ப்பித்த அர்ச்சனா.! அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ.! 5

விளம்பரம்

ஆனால் பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் ஒருவார காலமாக எந்தவித பதிவையும் பகிராமல் இருந்து வந்தார் அர்ச்சனா. இதற்கு பி.ஆர் டீமுக்கு ரூ.13 லட்சம் பாக்கி வைத்திருப்பதால் தான் அவரால் எந்த பதிவையும் போட முடியவில்லை என்று பிக் பாஸ் விமர்சகர்கள் விமர்சித்து வந்தனர். தற்போது அதையும் பொய்யாக்கி தனது குருநாதர் மற்றும் ‘ராஜா ராணி’, ‘பாரதி கண்ணம்மா’ போன்ற சீரியல்களை இயக்கிய இயக்குனர் பிரவீன் பென்னட்டிடம் தனது கோப்பையை வழங்கி, தன்னை இந்த சின்னத்திரையில் அறிமுகம் செய்து தனக்கு வழி காட்டிய குருநாதருக்கு சமர்ப்பிப்பதாக கூறி புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment