“சின்ன புள்ளைக்கு போய் கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறீங்க?” குணசேகரனை எதிர்க்கும் கதிர்.!

‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தர்ஷினியை கரிகாலனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் ஆதி குணசேகரனுக்கு எதிராக தற்போது கதிர் பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் ஆதி குணசேகரன் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் தற்போது ஆதி குணசேகரனின் மகள் தர்ஷினியை காணவில்லை. அவரை கரிகாலனுக்கு திருமணம் செய்து வைக்க குணசேகரன் ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் அவர் காணாமல் போய்விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"சின்ன புள்ளைக்கு போய் கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறீங்க?" குணசேகரனை எதிர்க்கும் கதிர்.! 1
ஆனால் தர்ஷினிக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை. தர்ஷினி மட்டுமில்லாமல் வீட்டில் இருக்கும் யாருக்குமே இந்த திருமணத்தில் உடன்பாடில்லை. பள்ளி படித்துக் கொண்டிருக்கும் குழந்தையை போய் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார் என்று ஆதி குணசேகரன் மீது ஜனனி காவல்துறையில் புகார் கொடுக்கிறார். நிலைமை இப்படியாக இருக்கும் நிலையில் தற்போது தர்ஷினி பள்ளி சென்று விட்டு திரும்பும் வழியில் அவரை சிலர் காரில் கடத்தி விடுகின்றனர். அவரை யார் கடத்தினார்கள்? என்ன காரணம்? என்று தெரியாமல் அனைவரும் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஆடிட்டர் கொண்டு வந்து கொடுத்த கோப்புகள்.! உடைந்து போய் அழுத ஒட்டுமொத்த குடும்பம்.!

"சின்ன புள்ளைக்கு போய் கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறீங்க?" குணசேகரனை எதிர்க்கும் கதிர்.! 3
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கரிகாலனும் ஜான்சி ராணியும் தான் தர்ஷினியை கடத்தி இருப்பதாக கூறி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அடித்து துவைத்து கொண்டிருக்கின்றனர். அங்கு வரும் கதிர் தனது அண்ணன் குணசேகரனிடம், “சின்னப்புள்ள அவ, ஸ்கூல் படிச்சு கொண்டிருக்கும் பிள்ளைய போய் திருமணம் செய்து வைக்க இப்படி ஏற்பாடு செய்கிறீர்களே?” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். கதிர் கொஞ்சம் கொஞ்சமாக தனது அண்ணன் குணசேகரனுக்கு எதிராக திரும்பி வருகிறார். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment