நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் படம் “பத்து தல”. சிம்புவுடன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், ஜோ மல்லோரி நடிப்பில் உருவாகும் இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைக்கிறார். கெங்ஸ்டர் – போலீஸ் படமான இது மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்கனவே உருவாக்கி உள்ளது. மாநாடு படம் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ள சிம்பு தாதாவாக இந்த படத்தில் நடித்து வருகிறார்.

கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். கன்னட மொழியில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான “மாப்ட்டி” படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேககாக்கும் இந்த படம். 2017ஆம் ஆண்டு வெளியான் இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது. அதன் அடிப்படையிலேயே இந்த ரீ-மேக் உருவாகி வருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் நடிகர் சிம்புவின் உடல் மாற்றம் என படம் துவங்கியது முதல் பிரச்சைனைகள் வந்து கொண்டே இருக்க, படத்தின் வெளியீடு தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் ,முடித்துள்ளதால், ஒரே கட்டமாக மீதமுள்ள படப்பிடிப்புகளையும் எடுத்துமுடித்து வருகிறது படக்குழு.
நடிகர் டி.ஆர் உடல்நல சரியில்லாமல் போனதால் இப்பொது அமெரிக்காவிலுள்ள நடிகர் சிம்பு விரைவில் நாடு திரும்பி மீண்டும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்கவுள்ளார். படத்திற்கான வேலைகளும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தை தயாரித்து வரும் ச்டுடயோ கிறீன் நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பாடம் வருகிற டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுளள்து. இதே போலவே அண்மையில் வெந்து தணிந்தது காடு படம் வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு, ராதிகா நடிககும் இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானே இசைமைத்து வருகிறார்.