அண்ணன் அருண்விஜய் நடித்துள்ள “யானை” படம் பற்றி வனிதா போட்ட போஸ்ட்.! என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க

வனிதா விஜயகுமாரை தெரியாத ஆட்களே தமிழ்நாட்டில் இருக்க முடியாது. அந்த அளவிற்கு தமிழ் மக்களிடையே பிரபலமான ஒருவர் தான் வனிதா. நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகள் தான் வனிதா. இவருக்கு முதலில் சின்னத்திரை நடிகர் ஆகாஷ் என்பவருடன் திருமணமாகி ஸ்ரீஹரி என்ற மகன் இருக்கிறார். ஆகாஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்தார் வனிதா, மகன் ஸ்ரீஹரி தாத்தா விஜயகுமார் பாதுகாப்பில் வளர்ந்து வளர்கிறார். பின்னர் இரண்டாவது கணவருடனும் வாழ பிடிக்காமல் தனது இரு மகள்களுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் வனிதா. இது அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அண்ணன் அருண்விஜய் நடித்துள்ள "யானை" படம் பற்றி வனிதா போட்ட போஸ்ட்.! என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க 1

விளம்பரம்

தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் வனிதா. பிரசாந்த் நடிக்கும் அந்தகன், வசந்த பாலன் இயக்கும் புது படம் ஒன்றிலும், பவர் ஸ்டாருடன் இணைந்து ஒரு படமும் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் ஃபேஷன் ஆடைகள் விற்கும் கடை ஒன்றையும், மேக்கப் சாதனங்கள் கடை ஒன்றையும் சென்னையில் நடத்தி வருகிறார். குடும்பத்தினர் யாருடனும் அவர் பேசுவதில்லை. அவரது சகோதரிகள், சகோதரர் அருண் விஜய் ஆகியோர் கூட வனிதாவை ஒதுக்கி வைத்துவிட்டனர். சமீபத்தில் கூட ஒரு குடும்ப விழாவில் சகோதர சகோதரிகள் அனைவரும் இருக்கும் புகைப்படம் வெளியானது. அதில் வனிதா எங்கே? ஏன் அவரை ஒதுக்கி விட்டீர்கள் என்று கமெண்ட்டில் பலர் கேள்வி எழுப்பினார்கள். இதனால் நெகிழ்ந்து போனார் வனிதா. மக்கள் தன் மேல் காட்டும் அன்பினால் அவர் தனது போக்கை மாற்றிக் கொண்டுள்ளார்.

தொடர்புடையவை  "இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்"!! போன் எடுத்துட்டு கல்யாணத்திற்கு வராதீங்க!!கல்யாணத்திற்கு வரவங்களுக்கு கட்டுப்பாடு போட்டு திருமணம் செய்யும் நயன்தாரா விக்னேஷ் சிவன்!!

அண்ணன் அருண்விஜய் நடித்துள்ள "யானை" படம் பற்றி வனிதா போட்ட போஸ்ட்.! என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க 3

விளம்பரம்

இன்று வனிதாவின் அண்ணன் அருண் விஜய் நடிப்பில், தங்கை பீர்த்தாவின் கணவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படம் வெளியாகியுள்ளது. பலரும் நல்ல கருத்துக்களை கூறி வருகின்றனர். படம் நன்றாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தை வாழ்த்தி வனிதா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யானை படத்தின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து கடின உழைப்பும், முயற்சியும் தோல்வியடையாது என்று குறிப்பிட்டுள்ளார். எவ்வளவுதான் தனது குடும்பம் தன்னை வெறுத்து ஒதுக்கினாலும் அவர்கள் மீது இன்னும் பாசமாகத்தான் இருக்கிறார் வனிதா.

அண்ணன் அருண்விஜய் நடித்துள்ள "யானை" படம் பற்றி வனிதா போட்ட போஸ்ட்.! என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment