படத்துல வர எல்லாருமே ஜீரோ.! பட்டத்து அரசன் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை.!

நடிகர் அதர்வா நடிப்பில் நேற்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் தான் பட்டத்து அரசன். இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது விமர்சனங்களை கடுமையாக முன் வைத்திருக்கிறார். பாணா காத்தாடி என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் அதர்வா. இவர் நடிகர் முரளியின் மகன் ஆவார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் அவருக்கு அடுத்தடுத்து பல படங்கள் கிடைத்தது. ஈட்டி, சண்டிவீரன், பரதேசி, இமைக்கா நொடிகள் போன்ற பல வெற்றி படங்களை அவர் கொடுத்திருக்கிறார். தற்போது இயக்குனர் சற்குணத்துடன் இணைந்து அவர் நடித்துள்ள படம் தான் பட்டத்து அரசன். இந்த படத்தில் ராதிகா, ஆர் கே சுரேஷ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படத்துல வர எல்லாருமே ஜீரோ.! பட்டத்து அரசன் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை.! 1

விளம்பரம்

.கபடி வீரராக இருக்கும் ராஜ்கிரணின் இரண்டு பேரன்கள் தான் அதர்வாவும் அவரது தம்பியும். அதர்வாவின் தம்பி கபடி விளையாட்டில் காசு வாங்கிவிட்டு எதிரணி ஜெயிக்கும் படி செய்து விட்டதாக அவர் மீது பழி சுமத்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் பழியை சுமக்கும் அதர்வாவின் குடும்பம் எப்படியாவது கபடி விளையாட்டில் ஜெயித்து இந்த பழியை துடைக்க வேண்டும் என்று போராடி வருகிறது. மேலும் அதர்வா தன்னுடைய குடும்பத்தையும் ஒன்றாக சேர்க்கும் வேலையையும் பார்த்து வருகிறார். கபடி போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களே பெற்றிருக்கிறது.

தொடர்புடையவை  மாஸா? கிளாஸா? தனுஷை மறைமுகமாக தாக்கினாரா சிம்பு? ட்விட்டரில் கடுமையாக மோதிக்கொள்ளும் ரசிகர்கள்

படத்துல வர எல்லாருமே ஜீரோ.! பட்டத்து அரசன் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை.! 3
படம் குறித்து தனது விமர்சனங்களை ப்ளூ சட்டை மாறன் மிகக் காட்டமாகவே வைத்திருக்கிறார். ஒரு விளையாட்டு படத்திற்கு தேவையான கதையை வைத்துக்கொண்டு தேவையில்லாமல் காதல் காட்சிகள், சென்டிமென்ட், பிரிந்த குடும்பத்தை ஒன்றாக சேர்ப்பது என்று இந்த படத்தை கெடுத்து விட்டார்கள். படமே ஜீரோவாக தான் இருக்கிறது. இந்த படத்தில் நடித்த அனைவரும் ஜீரோவாக இருக்கின்றனர். ராஜ்கிரண் மட்டும் ஜீரோவுக்கு முன்பு சேர்க்கப்படும் மதிப்பு உள்ள 1 ஆக இருக்கிறார். கபடி விளையாட்டில் கப்பை ஜெயிக்கிறேன் என்று அவர்கள் சொல்லி நம்மை களைப்படைய வைத்து விட்டார்கள் என்று காட்டமான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். நீங்களும் அவரது வீடியோவை காண..! Watch the below video.!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Tamil Talkies

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment