ஆல்யா மானசா நடிக்கும் புதிய சீரியல்.! வெளியானது ப்ரோமோ.! விஜய் டிவியில் இருந்து விலகினார் ஆல்யா

சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவியில் ஒரு புதிய சீரியல் கமிட்டாகி இருக்கிறார். அதற்கான ப்ரோமோவை தற்போது சன் டிவியில் வெளியிட்டிருக்கிறது. மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் மூலமாக பலருக்கும் அறிமுகமானவர் ஆல்யா மானசா. பின்னர் இவருக்கு ராஜா ராணி என்கிற தொடர் மூலமாக சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரின் மூலமாக பலரின் கவனத்தை ஈர்த்தார். பல ரசிகர்கள் இவருக்கு கிடைத்தார்கள். இந்த தொடரில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்பவரையே இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆல்யா மானசா நடிக்கும் புதிய சீரியல்.! வெளியானது ப்ரோமோ.! விஜய் டிவியில் இருந்து விலகினார் ஆல்யா 1

விளம்பரம்

பின்னர் அதே தொலைக்காட்சியில் ராஜா ராணி சீசன் 2 வில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலக நேர்ந்தது. பின்னர் அவர் உடல் எடை கூடியதால் எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் இருந்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துள்ள அவர் மீண்டும் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் தன்னுடைய youtube பக்கத்தில் கூட அந்த தகவலை அவர் உறுதிப்படுத்தி இருந்தார்.சன் தொலைக்காட்சியில் சரிகம நிறுவனத்தின் தயாரிப்பில் தான் ஒரு புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

தொடர்புடையவை  கணவருக்காக வீட்டில் வரலக்ஷ்மி பூஜை செய்த மைனா நந்தினி.! அலங்காரம் ரொம்ப அழகா இருக்கு மைனா.!

ஆல்யா மானசா நடிக்கும் புதிய சீரியல்.! வெளியானது ப்ரோமோ.! விஜய் டிவியில் இருந்து விலகினார் ஆல்யா 3
இந்த நிலையில் தற்போது அவர் இனியா என்கிற ஒரு சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது சன் டிவி வெளியிட்டு இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..watch the below video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Sun Tv

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment