திருமணத்திற்கு 2 நாட்களே உள்ள நிலையில் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய கெளதம் மஞ்சிமா ஜோடி.!

திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கௌதம் கார்த்திக் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லட்சக்கணக்கான லைக்ஸை குவித்து வருகின்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு 2 நாட்களே உள்ள நிலையில் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய கெளதம் மஞ்சிமா ஜோடி.! 1
நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான கடல் என்னும் படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்தது. அதன் பின்னர் இவர் சில படங்களில் நடித்தார். குறிப்பாக இவர் தேவராட்டம் என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது மஞ்சிமா மோகனுடன் இவருக்கு காதல் மலர்ந்தது.

விளம்பரம்

திருமணத்திற்கு 2 நாட்களே உள்ள நிலையில் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய கெளதம் மஞ்சிமா ஜோடி.! 3
ஆரம்பத்தில் தங்களது காதலை ஒத்துக்கொள்ளாமல் இருந்து வந்த இந்த ஜோடிகள், சில நாட்களுக்குப் பின்பு தாங்கள் இருவரும் காதலிப்பதாக ஒப்புக்கொண்டனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தனர். தொடர்ந்து இவர்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வியையும் அவரது ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.

தொடர்புடையவை  வாரிசு ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு.! என்ன நண்பா ஆட்டத்துக்கு ரெடியா?

திருமணத்திற்கு 2 நாட்களே உள்ள நிலையில் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய கெளதம் மஞ்சிமா ஜோடி.! 5
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இருவரும், வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி தங்களுக்கு திருமணம் என்றும் சென்னையில் எளிமையாக வைத்து திருமணம் நடைபெற இருப்பதாகவும் அறிவித்தனர். மேலும் புகைப்படங்களை 12 மணி அளவில் தாங்களே வெளியிட இருப்பதாகவும், பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறியிருந்தனர்.

விளம்பரம்

திருமணத்திற்கு 2 நாட்களே உள்ள நிலையில் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய கெளதம் மஞ்சிமா ஜோடி.! 7
திருமணம் மட்டுமே நடைபெற இருப்பதாகவும், வரவேற்பு நடைபெறவில்லை, திரை பிரபலங்கள் பலரையும் அழைக்கவில்லை. மிக எளிமையாக சென்னையில் வைத்து திருமணத்தை முடிக்க இருப்பதாக கௌதம் கார்த்திக் கூறினார்.

திருமணத்திற்கு 2 நாட்களே உள்ள நிலையில் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய கெளதம் மஞ்சிமா ஜோடி.! 9
இந்த நிலையில் திருமணத்திற்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் தற்போது அவர்கள் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர். மிக அழகாக இருக்கும் அந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.

விளம்பரம்

திருமணத்திற்கு 2 நாட்களே உள்ள நிலையில் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய கெளதம் மஞ்சிமா ஜோடி.! 11

மேலும் ஒரு அழகிய வீடியோவையும் அவர்கள் வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment