போன மாதம் கர்ப்பம், இந்த மாதம் ரகசிய திருமணம், அடுத்து என்ன.? பாவனி கொடுத்த அதிர்ச்சி பதில்.!

வெளியிட்டது

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமாக ஜோடிகளாக வலம் வரும் அமீர் மற்றும் பாவனி தற்போது ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் என்றும், திருமணத்திற்கு முன்பே பாவனி கர்ப்பமாக இருக்கிறார் என்றும் செய்திகள் பரவத் தொடங்கியிருந்த நிலையில் தற்போது அது குறித்து பாவனியே விளக்கம் அளித்து இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி போன்ற சீரியல்களின் மூலமாக தமிழக மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகை பாவனி ரெட்டி. ஆந்திராவைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் தமிழுக்கு திரும்பி இவர் விஜய் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்தார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில நாடகங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி சில மாதங்களிலேயே கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் தனியாக வாழ்ந்து வந்த பாவனிக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 5வில் போட்டியாளராக களம் இறங்கினார்.

போன மாதம் கர்ப்பம், இந்த மாதம் ரகசிய திருமணம், அடுத்து என்ன.? பாவனி கொடுத்த அதிர்ச்சி பதில்.! 1
இந்த சீசனின் முக்கிய போட்டியாளராக இருந்த அவருக்கு வைல்ட் கார்டு என்று ஆக வந்த அமீருடன் காதல் ஏற்பட்டது. உள்ளே வந்த உடனேயே அமீர் தனது காதலை பாவனியிடம் கூறினார். மேலும் வீட்டில் வேறு வேலைகளே இல்லாமல் பாவனியை துரத்தி துரத்தி காதலித்து வந்தார் அமீர். ஆனால் அமீரின் காதலை ஏற்காமலேயே இருந்து வந்தார் பாவனி. இதையடுத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் நெருங்கி பழகத் தொடங்கியிருந்தனர். பின்னர் இந்த சீசனில் வெற்றியாளராக இந்த ஜோடிகள் முதலிடத்தை பிடிக்க, நெகிழ்ந்து போன பாவனி, அமீருடனான தனது காதலை உறுதிப்படுத்தினார். முதன்முறையாக வாழ்க்கையில் இப்படி ஒரு வெற்றியை பார்க்கிறேன். அதற்கு காரணமாக இருந்த அமீரின் காதலை ஏற்றுக் கொள்வதாக சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார். தற்போது அமீரும் பாவனியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். சமீப காலமாக இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்றும், பாவனி கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல்கள் இணையத்தில் வதந்திகள் கசிய தொடங்கியது.


இந்த நிலையில் பாவனி சமீபத்தில் instagram ஸ்டோரியில் கேள்விக்கு பதில் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினார். அப்போது ரசிகர் ஒருவர் அக்கா உங்களுக்கும் அமீர் அண்ணனுக்கும் மேரேஜ் ஆயிடுச்சா? நீங்க Official- ஆ எதுவுமே சொல்லலையே என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த பாவனி., ம்ம்ம்..! நீங்களே முடிவு பண்ணிட்டீங்களா? கடந்த மாதம் கர்ப்பமா இருக்கிறதா சொன்னீங்க, அப்புறம் நாங்க ரெண்டு பேரும் காதலை முறித்து விட்டதாக சொன்னீங்க, இப்போ ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சொல்றீங்க? அடுத்து என்ன சொல்ல போகிறீர்கள்? என்று சொல்லி சிரிக்கும் எமோஜி உடன் பதில் அளித்திருக்கிறார். இதையடுத்து தங்கள் இருவரும் ரகசிய திருமணம் எதுவும் செய்து கொள்ளவில்லை, தங்களுக்குள் பிரிவு எதுவும் இல்லை, மேலும் தான் கர்ப்பமாக இல்லை என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார் பாவனி.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்