“அவுங்களுக்கு கல்யாணம்னா நாங்க ஏன் பீச்சுக்கு போக கூடாது”!! பீச்சிற்கு வந்த மக்களை விரட்டி அடிக்கும் போலீஸ்!! கொந்தளிக்கும் மக்கள்!!

வெளியிட்டது

7 ஆண்டுகள் காதல் உறவில் இருந்து வந்த இயக்குனரும் விக்னேஷ் சிவனும், முன்னணி நடிகை நயன்தாராவும் இன்று பாரம்பரிய முறைப்படி மிக பிரமாண்டமாக மஹாபலிபுரத்தில் நடைபெற்றது. இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் இன்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்கள் திருமணம் எப்போதுமே ரசிகர்களின் விருப்ப லிஸ்ட்டில் இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திருமணம் குறித்த அறிவிப்பை மேற்கொண்ட விக்னேஷ் சிவன் தற்போது திருமணத்தை முடித்துள்ளார்.

இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், அஜித், விஜய், கார்த்தி, சரண்யா, சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தத் திருமணத்தில் கலந்துக் கொண்டுள்ளனர். குறைந்த அளவிலானவர்களுக்கே இந்தத் திருமணத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

"அவுங்களுக்கு கல்யாணம்னா நாங்க ஏன் பீச்சுக்கு போக கூடாது"!! பீச்சிற்கு வந்த மக்களை விரட்டி அடிக்கும் போலீஸ்!! கொந்தளிக்கும் மக்கள்!! 1
இதனிடையே, ரசிகர்கள் திருமணத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. விஜபிக்கள் செல்போன் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இதனிடையே ரெசார்ட்டின் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


இதையடுத்து காலையில் வாக்கிங் வந்தவர்களையும் அந்தப் பகுதியில் அனுமதிக்காததால் பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடற்கரை என்பது பொதுஇடம் என்றும் தங்களை வரக்கூடாது என்று சொல்ல முடியாது என்று அவர்கள் வாதம் செய்தனர். இதனால் அந்த இடமே பரபரப்புக்கு உள்ளானது.


இதனிடையே மற்றொரு இடத்தில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை நயன்தாராவே அனுமதிக்க மாட்டார் என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர். அந்த ஹோட்டலையொட்டிய கடற்கரையில் பொதுமக்கள் வாக்கிங் சென்றபோது அங்கிருந்த போலீசார் மற்றும் ஒருசில பவுன்சர்கள் அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

என்னதான் பிரபலங்களாக இருந்தாலும் அவர்கள் இதுபோன்று மக்களுக்கு இடையூறு விளைவிக்கும்வகையில் நடந்துக் கொள்ளக்கூடாது என்பதும் அவர்களது வாதமாக இருந்தது. தொடர்ந்து பல கட்டுப்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருவதால், இதையொட்டி சமூக வலைதளங்களில் பல மீம்ஸ்களும் உலவி வருகின்றன.

பிரபலமாக திருமணம் செய்தலும் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளும் இவ்வாறான சம்பவங்கள் போது மக்களுக்கு கொஞ்சம் சங்கடத்தை கொடுத்துள்ளது. உண்மையில் ஒரு தனியார் விழாவிற்கு போலீஸ் துறையும் இவ்வாறு உதவுவது மக்களுக்கு அதிர்ச்சியாகவும் உள்ளதாக சிலர் கருத்து கூறி வருகிறார்கள்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்