கோபி சுதாகர் இந்த பெயர்களை தெரியாத ஆட்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு அனைவரையும் கலாய்த்து தள்ளிய பிரபலங்கள் தான் இவர்கள் இருவரும். இன்ஜினியரிங் படித்த இருவரும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். மிமிகிரி நன்றாக செய்யும் இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு ஆடிசன்க்கு சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் ஈரோடு மகேஷால் அவமானப்படுத்தப்பட்டு வெளியே அனுப்பப்பட்டனர்.

பிறகு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சிறு சிறு காமெடி ஷோக்களை நடத்தி வந்தனர். பின்னர் ஒரு யூடியூப் சேனலில் இணைந்து பல தரமான தொடர்களை ஆரம்பித்து புகழின் உச்சிக்கே சென்று விட்டனர்.பின்பு அங்கிருந்து விலகி பரிதாபங்கள் என்ற சேனலில் காமெடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்களின் வீடியோ பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து விடுவது வழக்கம். இவர்களுக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

தன்னை அவமானப்படுத்தி வெளியே அனுப்பியவர்கள் முன்னாள் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று வெறியோடு ஒரு சின்ன சேனலில் தங்களது பயணத்தை ஆரம்பித்து இன்று தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்ட முகமாக இருக்கின்றனர். வங்கியில் வேலை பார்ப்பவர்கள் போன்று இவர்கள் செய்து காட்டிய பேங்க் பரிதாபங்கள் வீடியோ இன்றும் பார்வையாளர்களை அள்ளுகிறது. சமீபத்தில் சுதாகருக்கு திருமணம் முடிந்த நிலையில் தற்போது கோபிக்கு நிச்சயம் நடந்துள்ளது. அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கோபிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Video Code Embed Credits: fbored