Categories: அரசியல்

மக்களவையில் பொய்யான தகவலை கூறிய பிரதமர்

காஷ்மீர் மீதான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா கூறியதாக பொய்யான தகவல் ஒன்றை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

மக்களவையில் பொய்யான தகவலை கூறிய பிரதமர் 1
மக்களவையில் பேசிய மோடி

நேற்று மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஓமர் அப்துல்லாவின் கருத்து குறித்து கூறினார். மோடியின் கூற்றுப்படி, 370 வது பிரிவை ரத்து செய்வது பூகம்பத்தை ஏற்படுத்தும் என்றும், இது காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்கும் என்றும் அப்துல்லா கூறியிருந்ததாக தெரிவித்தார்.

இந்த பொய்யான தகவல் பாஜகவின் ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டதால் பெரும்பாலோனரை சென்றடைந்தது. எவ்வாறாயினும், மே 28, 2014 அன்று வெளியிடப்பட்ட நையாண்டி பக்கமான ஃபேக்கிங் நியூஸின் ஒரு கட்டுரையில், “370வது பிரிவை நீக்குவது காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்கும் பூகம்பங்களை ஏற்படுத்தும்: உமர் அப்துல்லா.” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இணையதளத்தில் இது குறித்து தெரிவிக்கப்படும் போது, “கட்டுரைகள் புனையப்பட்டது தான். ஆகையால் யாரும் இதனை உண்மையென கருதி குழப்பிக்கொள்ள வேண்டாம்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் மாநிலங்களுக்கான அமைச்சராக இருந்த ஜிதேந்திர சிங் கூறிய கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அப்துல்லா கருத்து ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதில், “மோடி அரசாங்கம் அவர்களின் பழைய தொலைநோக்கு பார்வையை வெளிபடுத்துகிது. ஒன்று காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது அல்லது சட்டப்பிரிவு 370 இருந்தே ஆகும்” என தெரிவித்திருந்தார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்