டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவு படுத்துவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
இதுகுறித்து நாக்பூரில் செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே, ” வேண்டும் என்று சமுதாயத்தில் அமைதியின்மையை உருவாக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய விதத்தைப் பார்த்தால் அது ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவுபடுத்துவதாகும் கவலை தெரிவித்தார்.

இளைஞர்களை தொந்தரவு செய்யும் எந்த ஒரு நாடும் நிலையானதாக இருக்க முடியாது. இந்த நாட்டில் இளைஞர்களை சீர்குலைக்க வேண்டாம் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டார். அதுமட்டுமின்றி இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம். அவர்களிடம் நிறைய ஆற்றல் உள்ளது. இளைஞர்கள் வெடிகுண்டு போன்றவர்கள், அவர்களை தூண்டி விடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.