Categories: அரசியல்

திமுக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!

திமுக தலைமையில் நாளை நடைபெறவிருப்பதாக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

திருத்தபட்ட குடியுரிமை மசோதவிற்கு எதிராக நாடு முழுவதும் போரட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டக்காரர்கள் பெரும் அடாக்குமுறையை சந்தித்து வருகிறார்கள்.

திமுக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு! 1

சமீபத்தில் வெளியான தகவலின் படி, கர்னாடகா மங்களூரில் சுமார் 3 பேரும், உத்திர பிரதேசதில் 16 பேரும் பலியாகியுள்ளனர். அதே போல, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் போரட்டம் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையில் அனைத்துக் கட்சிகள் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக தடை கேட்டு உயர்நீதி மன்றத்தில் வாராகி என்பவரால் வழக்கு தொடரபட்டுள்ளது. தற்போது நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா தலைமையிலான திமுக மனுவின் மீதான விசாரனை தொடங்கபட்டுள்ளது. ஆனால் தற்போது இப்பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்