திமுக பேரணிக்கு அனுமதி: உயர்நீதி உத்தரவு

திமுக தலைமையிலான பேரணிக்கு அனுமதி வழங்கி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் திமுக தலைமையில் அனைத்து கட்சி பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

விளம்பரம்
திமுக பேரணிக்கு அனுமதி: உயர்நீதி உத்தரவு 1
மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் திமுகவின் பேரணிக்கு தடை கேட்டு வாராகி என்பவரால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா சில நிபந்தனைகளுடன் திமுக அதிமுகவின் பேரணிக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

திமுக பேரணி: நிபந்தனைகள் என்ன…?

விளம்பரம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுகவின் பேரணியில் சட்டம்-ஒழுங்கை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், “குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான நாளைய பேரணிக்காக மிகப்பெரிய விளம்பரத்தை அதிமுக அரசு எங்களுக்கு செய்து கொடுத்துள்ளது; அதற்காக நன்றி கூற விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment