Categories: சினிமா

விக்ரம் படத்தின் வாழ்நாள் சாதனையை பத்தே நாளில் அடித்து நொறுக்கிய பொன்னியின் செல்வன்.!

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 10 நாள் வசூல் சுமார் 400 கோடியை தாண்டி இருப்பதாக அதன் தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்துள்ளது. இது பல படங்களின் ஒரு மாத வசூலை வெறும் 10 நாட்களில் முறியடித்து சாதனை படைத்துள்ளது. இதனை பிளாக் பஸ்டர் வசூல் என லைகா நிறுவனமே அறிவித்திருக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது தான் இந்த திரைப்படம். செப்டம்பர் 30ஆம் தேதி படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளே 80 கோடி வசூலை பெற்று இருந்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. சோழர்களின் வரலாறு என்பதால் இந்த படத்தை உலகம் முழுவதிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தமிழ் ரசிகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விக்ரம் படத்தின் வாழ்நாள் சாதனையை பத்தே நாளில் அடித்து நொறுக்கிய பொன்னியின் செல்வன்.! 1

எனவே படம் செய்த வசூல் பற்றிய அறிவிப்பை அவ்வப்போது லைகா நிறுவனம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. இதற்கிடையே படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அதிகாரப்பூர்வமான பணிகளை தற்போதே மணிரத்தினம் தொடங்கி இருக்கிறார். 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படத்தின் வசூல், தற்போது 500 கோடியை நெருங்கி இருக்கிறது. இன்றைய நிலவரப்படி இந்த படம் 400 கோடிக்கும் அதிகமான வசூலை உலகமெங்கிலும் கொடுத்திருக்கிறது. படம் வெளியான 11-வது நாளில் இந்த படம் 400கோடி வசூலை கொடுத்திருக்கிறது. விக்ரம் படம் மொத்தமாகவே 500 கோடி வசூலை அள்ளியிருக்கும் நிலையில், பொன்னியின் செல்வன் 11-வது நாளிலேயே விக்ரம் படத்தின் வசூலை நெருங்கி இருக்கிறது.

இந்த வசூலின் மூலமாக தமிழ் சினிமா ஒரு புதிய உச்சத்தை அடைகிறது. உலக நாடுகளை எல்லாம் இந்த படம் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை. படத்தின் வசூல் மேன்மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வேறு எந்த புது படமும் வெளியாகாததால் பொன்னியின் செல்வன் இன்னும் சில நாட்களில் 500 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் அதிகமாக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையும் பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்