Categories: சினிமா

மணி சார் ஒரு காலி பெருங்காய டப்பா.! எல்லாம் புளிச்சுனு காரி துப்புறான்.! PS-2வை கிழித்து தொங்க விட்ட ப்ளூ சட்டை.!

வெளியிட்டது

நேற்று தமிழகம் எங்கும் இருக்கும் திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து பிரபல திரை விமர்சகராக இருக்கும் ப்ளூ சட்டை மாறன் காட்டமான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் கூறிய விமர்சனத்தில், முதல் பாகத்திலேயே ஊமைக்குத்தாக குத்தி அனுப்பி விட்டார்கள், இதனால் இரண்டாம் பாகத்தை பார்க்க யாரும் வரவில்லை. தியேட்டரெல்லாம் காத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்திற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும், அந்த நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்பதை காட்ட வேண்டும். ஆனால் அந்த நோக்கம் எந்த இடத்திலுமே இல்லை, படம் முழுவதும் மிகுந்த பிளாட்டாக இருக்கிறது. இந்த கதை வார பத்திரிக்கையில் தொடராக வந்த போது இதை நாவலை படித்தவர்கள் எல்லாம் கடை வாசலில் காத்துக் கிடந்ததாக கூறுவார்கள். அந்த அளவிற்கு விறுவிறுப்பாக எழுதி இருப்பார் கல்கி. ஆனால் மணிரத்தினம் ஒரு காலி பெருங்காய டப்பா என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மணி சார் ஒரு காலி பெருங்காய டப்பா.! எல்லாம் புளிச்சுனு காரி துப்புறான்.! PS-2வை கிழித்து தொங்க விட்ட ப்ளூ சட்டை.! 1

இந்தப் படத்தை பார்த்துக் கொண்டிருந்த பலருக்கும் படம் எப்படா முடியும் என்று ஆகிவிட்டது. பாகம் ஒன்று வந்தபோது முட்டுக் கொடுத்த முட்டு பாய்ஸ் கூட இந்த இரண்டாம் பாகத்தை பார்த்துவிட்டு கிழவியாக இருக்கும் த்ரிஷாவும், கார்த்தியும் காதல் செய்வதை பார்த்து சுருண்டு விழுந்து விட்டார்கள். ஒரு குதிரையை எடுத்து வந்து இது அரேபிய குதிரை, ஆஸ்திரேலிய குதிரை என்று சொல்லி விற்று விடலாம். ஆனால் ஒரு கழுதையை கூட்டி வந்து விற்க முடியாது. சீனாவில் எல்லாம் 12 மணி நேர வேலை பாரம் தாங்காமல் பன்னிரண்டாவது மாடியில் இருந்து குதித்து இறந்து விடுகிறார்கள். அதற்காக அந்த கட்டிடங்களை சுற்றி வலைக் கட்டி வைத்திருப்பார்களாம். அதுபோல இந்த படம் ஒளிபரப்பாகும் தியேட்டர்களை சுற்றி வலை கட்டி வைத்தல் நல்லது. பொன்னியின் செல்வன் என்கிற பெயர் இந்த படத்தை தாங்கி இருக்கிறது. ஆனால் படத்தில் பொன்னியின் செல்வன் என்ன கிழிச்சார் என்று தெரியவில்லை. வந்திய தேவனும் ஆழ்வார்க்கடியானும் எங்கு சென்றாலும் சந்தித்துக் கொள்கின்றனர்.


அதைப் பார்க்கும் பொழுது டேய் நீ எங்க இருந்துடா வந்த? ஜிபிஎஸ் எதுவும் வச்சிருக்கியா என்று கேட்க தோன்றுகிறது. அதேபோல் எந்த ஒரு தண்ணீரில் விழுந்தாலும், விபத்து நடந்தாலும் ஒரு ஆயா வந்து காப்பாத்துது. அந்த ஆயா என்ன சூப்பர் ஹீரோவா? படம் முழுவதும் செயற்கையாக இருக்கிறது. ஒரு ஆராய்ச்சி கூட செய்யவில்லை. யாத்திசை என்கிற சமீபத்தில் ஒரு படம் வந்தது. அதில் நடிகர்கள் தேர்வு தொடங்கி அவ்வளவு ஆராய்ச்சி செய்து கம்மி பட்ஜெட்டில் அழகான படத்தை எடுத்திருப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அனைவரும் ஃப்ரிட்ஜில் இருந்து வந்த ஆப்பிள் போல் பிரஷ்ஷாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கதாபாத்திரம் ஒன்றவே இல்லை. அதனால் படத்தை ஒன்றி பார்க்கவே முடியவில்லை. நாவல் படிச்சவன் எல்லாம் ஃபர்ஸ்ட் பார்ட்ட பார்த்துவிட்டு கெட்ட கோபத்தில் இருக்கிறான். இப்போது இவன் இரண்டாவது பாகத்தை பார்த்தால் உக்கிரமாகிவிடுவான்.

இந்தப் நாவலை படிக்காதவன் எல்லாம் இதெல்லாம் ஒரு கதையா? இதை எழுதியவன் பெரிய எழுத்தாளனா? ஒரு பொய்யையும் பிராடையும் எழுதி வைத்திருக்கிறான். இந்த படத்தை தான் எம்ஜிஆரும் கமலும் எடுக்க விரும்பினார்களா? மணிரத்னம் வந்து இதை எடுத்து கிழிச்சிட்டாரா? பருத்தி மூட்டை பேசாம குடோனிலேயே இருந்திருக்கலாம் என்று சொல்லி புளிச்சென்று காரி துப்பி விடுவான் என்று பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு படத்தை கிழி கிழி என்று கிழித்து தொங்க விட்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அவரின் முழு விமர்சன வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Tamil Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்