நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் தற்போது மரணம் அடைந்துள்ள செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்., சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை காலமாகி இருக்கிறார். தமிழ் திரையுலகில் அதிரடிக்கு பெயர் போனவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பழம்பெரும் நடிகர்களாக இருந்த விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் ஆவார். இவருக்கு ஏற்கனவே சின்னத்திரை நடிகர் ஆகாஷூடன் திருமணம் ஆகி விஜய் ஸ்ரீ ஹரி என்கிற மகன் இருக்கிறார். ஆகாஷூடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார் வனிதா. அப்போது அவருக்கும் அவரது தந்தைக்கும் கடுமையான பிரச்சனை ஏற்பட்டது. மகன் விஜய் ஸ்ரீ ஹரி தன்னிடம் வளர வேண்டும் என்று பல கட்ட போராட்டங்களை நடத்தினார். ஆனால் அவர் வனிதாவிடம் இருந்தால் வீணாகி விடுவார் என்று சொல்லி விஜய குமார் தனது பேரனை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். எவ்வளவோ போராடியும் வனிதாவால் மகனை மீட்க முடியவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் வனிதா இரண்டாவதாக தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தற்போது அவருடைய இரண்டாவது மகள் தனது தந்தையிடம் ஹைதராபாத்தில் வளர்ந்து வருகிறார். மூத்த மகள் ஜோவிகாவுடன் சென்னையில் தனியாக வசித்து வருகிறார் வனிதா. இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வனிதா மூன்றாவதுதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சர்ச்சில் வைத்து கிறிஸ்த்தவ முறைப்படி நடைபெற்ற அந்த திருமணத்தில் மகள்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றியும், முத்தம் கொடுத்தும் திருமணத்தை நடத்தினார் வனிதா. பின்னர் சில நாட்களிலேயே அவருக்கு வனிதாவுடன் பிரச்சனை ஏற்பட்டது. ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளைகள் இருக்கும் நிலையில் வனிதாவுடன் திருமணம் செய்து கொண்டார் பீட்டர் பால். இதனால் அவரது மூத்த மனைவி மற்றும் பிள்ளைகள் பிரச்சனையில் இறங்க, சண்டை பெரிதானது் வனிதா லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ரவீந்தர் சந்திரசேகரன் உள்ளிட்டோருடன் கடுமையான வார்த்தை போர்களில் ஈடுபட்டார்.

பின்னர் இறுதியில் பீட்டர் பாலை விட்டு பிரிந்த வனிதா தனிமையில் வாழ்ந்து வந்தார். பீட்டர் பால் அளவுக்கு அதிகமாக குடிக்கிறார் தம் அடிக்கிறார் அவருடைய உண்மையான முகத்தை இப்போதுதான் தெரிந்து கொண்டேன் என்றெல்லாம் சொல்லி பீட்டர் பாலிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார் வனிதா. தற்போது பீட்டர் பால் திடீரென மரணம் அடைந்திருக்கும் செய்தி கிடைத்திருக்கிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நெஞ்சுவலி காரணமாக சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பீட்டர் பால் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்திருக்கிறார். இது குறித்து வனிதா விஜயகுமார் இரங்கல் தெரிவிக்காமல் இருந்து வருகிறார். வனிதா விஜயகுமார் பீட்டர் பாலின் இறுதி சடங்கிற்கு செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Zee Tamil News