பொன்னியின் செல்வன் படத்திலிருந்து “சொல்” என்ற பாடலின் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழில் அமைந்த மிகப் பிரமாண்ட நாவலான பொன்னியின் செல்வனை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது “பொன்னியின் செல்வன்” திரைப்படம். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி உள்ளார். லைகா ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்திக், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அவரது தம்பி ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும், ஆதித்த கரிகாலனின் தங்கை குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். மேலும் ஆதித்த கரிகாலனின் தோழனான வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திக் நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஒவ்வொரு பாடல்களாக வெளியாகி வருகிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஆதித்த கரிகாலனுக்கு உதவி புரிவதற்காக காஞ்சிபுரத்திலிருந்து தஞ்சைக்கு வரும் வழியில் சோழ தேசத்தின் அழகை ரசித்துக்கொண்டு வரும் வந்திய தேவனுக்கு “பொன்னி நதி” என்ற பாடல் வெளியிடப்பட்டது. பின்னர் சோழ தேசத்தின் வடதிசை தளபதியாக இருந்த ஆதித்த கரிகாலனுக்கு “சோழா சோழா” என்ற பாடல் வெளியானது. பிறகு மூன்றாவதாக “ராட்சச மாமனே” என்ற பாடல் வெளியானது. இது நாவலில் ஒரு சிறிய கூத்து போல் நடப்பதை மையப்படுத்தி இந்த பாடல் வெளியானது. சமுத்திர குமரிக்கு அலைகடல் என்ற பாடலும், தற்போது ஐந்தாவது பாடலாக “சொல்” என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடல் ராஜராஜ சோழனின் அக்காவான குந்தவைக்கும், இராஜராஜ சோழனின் காதலியும், குந்தவையும் தோழியுமான வானதிக்கும் இடையேயான நட்பை விளக்கும் வகையில் இந்த பாடல் வெளியாகியிருக்கிறது.
இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாக இருக்கிறது. முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான நிலையில் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் இரண்டாவது பாகமும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என இந்தியா முழுவதும் ஐந்து மொழிகளில் படம் வெளியாகி 500 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து இருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் “சொல்” பாடலை நீங்களும் காண.. Watch the video below..
YouTube Video Code Embed Credits: Tips Tamil