சந்திரலேகா சீரியல் நடிகைக்கு திடீரென நடந்து முடிந்த திருமணம்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.!

சன் டிவியில் ஒளிபரப்பாகிய சந்திரலேகா என்கிற நாடகத்தில் நடித்து வரும் ஸ்வேதாவிற்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. சன் மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த மால் மருகா என்பவரை அவர் திருமணம் செய்துள்ளார். அந்த அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.நெடுந்தொடர்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். அந்த டிவியில் கடந்த எட்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த சந்திரலேகா என்னும் தொடரில் நடித்து வந்த ஸ்வேதா பண்டேக்கருக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவர் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சந்திரலேகா சீரியல் நடிகைக்கு திடீரென நடந்து முடிந்த திருமணம்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 1

விளம்பரம்

ஸ்வேதா பண்டேக்கர் ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் 2007 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார். பின்னர் பூவா தலையா, வள்ளுவனும் வாசுகியும், மீராவுடன் கிருஷ்ணன், நான் தான் பாலா, பூலோகம் ஆகிய சில படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மகள் என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்தார். இதுவே இவருக்கு முதல் நாடகமாகும்.

தொடர்புடையவை  பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிக்சன்..! ஐஷுவின் தந்தை போட்ட வைரல் பதிவு.! என்னனு தெரியுமா?

சந்திரலேகா சீரியல் நடிகைக்கு திடீரென நடந்து முடிந்த திருமணம்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 3

விளம்பரம்

பின்னர் சந்திரலேகா என்னும் சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார் ஸ்வேதா. இந்த சீரியலில் சந்திரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். கடந்த எட்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

சந்திரலேகா சீரியல் நடிகைக்கு திடீரென நடந்து முடிந்த திருமணம்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 5

விளம்பரம்

இந்த நிலையில் சமீபத்தில் ஸ்வேதா தனது வருங்கால கணவருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து விரைவில் திருமணம் நடைபெறுவதை அறிவித்து இருந்தார். 37 வயதாகும் ஸ்வேதா, அந்த பதிவில் என் இதயம் நீண்ட காலமாக காணவில்லை, இறுதியாக அதை நான் கண்டுபிடித்து விட்டேன், கடவுளுக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்.

சந்திரலேகா சீரியல் நடிகைக்கு திடீரென நடந்து முடிந்த திருமணம்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 7
இந்த நிலையில் அவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்தப் பதிவின் கீழே ஸ்வேதாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்..!

விளம்பரம்

youtube Video Code Embed Credits: Trend Talks

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment