விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று ரூ.16 லட்சம் ரூபாய் உடன் வெளியேறிய பூர்ணிமா ரவியை அவரது குடும்பத்தினர் மேளதாளங்கள் முழங்க வரவேற்று இருக்கும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 96 நாட்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முக்கிய போட்டியாளராக இருந்து வந்த பூர்ணிமா ரவி நேற்றைய தினம் ரூ.16 லட்சத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
அவரின் இந்த முடிவை பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் பாராட்டி வந்தனர். எப்படியும் ஒருவர் மட்டுமே வெல்ல முடியும் என்கிற சூழல் இருக்கும்பொழுது பூர்ணிமா ரவி செய்தது சரியான முடிவு என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டங்களை நெருங்கியிருக்கிறது. 23 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் எட்டு பேர் விளையாடி வந்தனர். இதில் பணப்பெட்டி டாஸ்க்கில் பூர்ணிமா வெளியேறி விட்டதால் மீதம் தற்போது ஏழு பேர் மட்டுமே இருக்கின்றனர். இவர்களில் இந்த வார இறுதியில் இருவர் எலிமினேட் செய்யப்பட்டு இறுதி மேடைக்கு ஐந்து பேர் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்தவர் தான் பூர்ணிமா. இவர் மாயாவுடன் சேர்ந்து கொண்டு விளையாடிய விளையாட்டு பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் தொடர்ந்து 96 நாட்கள் தாக்குபிடித்து விளையாடி வந்தார்.
தனக்கு வெளியில் கெட்ட பெயர் இருப்பதை தெரிந்து கொண்ட பூர்ணிமா தற்போது பிக் பாஸில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறி இருக்கிறார். எப்படியும் ஒருவர் மட்டுமே வெல்ல முடியும் என்கிற எதார்த்தத்தை அவர் புரிந்து கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் பூர்ணிமாவை அவரது குடும்பத்தினர் மேளதாளங்கள் முழங்க வரவேற்று இருக்கின்றனர். நடு ரோட்டில் இறங்கி குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோவை பூர்ணிமா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O