Categories: சினிமா

அதர்மத்தை ஒழிக்க ராம பிரானாக மாறிய பிரபாஸ்.! ஆதிபுருஷ் படத்தின் டீஸர் வெளியானது.!

வெளியிட்டது

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. தெலுங்கு உலகின் முண்ணனி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி திரைப்படத்திற்கு பின்பு இவருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகமாகினர். இவரது வாழ்வின் திருப்புமுனையாக இருந்த படம் பாகுபலி. இதற்கு பிறகு இவர் தற்போது அடுத்த காவியமான இராமாயணம் கதையில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஓம்ராவத் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் க்ருத்தி சனோன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆனது ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. ராமராக பிரபாஸும் சீதையாக க்ருத்தியும் நடித்துள்ளனர்.

அதர்மத்தை ஒழிக்க ராம பிரானாக மாறிய பிரபாஸ்.! ஆதிபுருஷ் படத்தின் டீஸர் வெளியானது.! 1

 

படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தையே மாற்றி இருக்கிறார். மேலும் இந்த படத்திற்காக அவர் வில் வித்தையும் கற்று இருக்கிறார். இந்த படம் மும்பை மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் படமாக்கப்பட்டது. வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா மூவியாக ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் டீசருக்காக ஒரு போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்தது படக்குழு. அதில் வானத்தை நோக்கி அம்பு எய்யும் ராமராக இருக்கிறார் பிரபாஸ். இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் லைக்கை குவித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் டீசர் இன்று அயோத்தியில் சரயு நதிக்கரையில் நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது படத்தின் டீசரை பட குழு வெளியிட்டு இருக்கிறது. நீங்களும் அந்த டீசரை காண.. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..Watch the below video..

Youtube Video Code Embed Credits: Lahari Music | T-Series

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்