ஜிபி முத்து நடித்து வரும் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் ஆடியோ லான்ச் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஹீரோயினாக சன்னி லியோன் நடித்து வருகிறார். மேடையில் சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டிவிட்டு அவருடன் சேர்ந்து ஜாலியாக நடனம் ஆடி இருக்கிறார் ஜிபி முத்து. அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல யூட்யூபரான ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் பிக்பாஸில் கலந்து கொள்ள வேண்டும் என்று இவரது ரசிகர்கள் பலரும் இவரை வற்புறுத்தி வந்தனர். டிக் டாக் செயலியின் மூலமாக பிரபலமானவர் உடன்குடியை சேர்ந்த ஜி பி முத்து. டிக் டாக் செயல் முடங்கிய பின்பு இவர் youtube சேனலை தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

ஒரு கட்டத்தில் இவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து கடிதங்களை எழுதி வந்தனர். அந்த கடிதங்களை பிரித்து படித்து அவர்களை திட்டி காமெடியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதனால் குறுகிய காலத்திலேயே பிரபலமானார். youtube மூலமாக இவருக்கு வருமானமும் பெருகியது. ஒரு காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்த ஜிபி முத்துவின் வாழ்க்கை மாறத் தொடங்கியது. பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. மூன்று படங்களில் நடித்து முடித்திருக்கிறார் ஜி பி முத்து. இந்த நிலையில் அவர் பிக்பாஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 6ன் முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி இருந்த பலரும் ஜிபி முத்துகாகவே இந்த நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கினர். அவரும் தொடர்ந்து காமெடிகளை செய்து வந்தார்.

ஆனால் கடைசி ஒரு நான்கைந்து நாட்களாக அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று தொடர்ந்து பிக்பாஸிடம் கோரிக்கை வைத்து கதறி அழுது வந்தார். இது அவரது ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரும் வெளியேற்றப்பட்டார். நேற்று ஜிபி முத்து நடித்து வரும் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் ஆடியோ லான்ச் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஹீரோயினாக சன்னி லியோன் நடித்து வருகிறார். மேடையில் சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டிவிட்டு அவருடன் சேர்ந்து ஜாலியாக நடனம் ஆடி இருக்கிறார் ஜிபி முத்து. அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Sun News Tamil