Categories: சினிமா

ராமரை தொடர்ந்து கல்கியாக அவதாரம் எடுத்த பிரபாஸ்.! ‘கல்கி’ படத்தின் ட்ரைலர் இதோ.!

வெளியிட்டது

தெலுங்கு திரையுலகின் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் நடிகர் பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 ஏடி படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ‘நடிகையர் திலகம்’ என்ற படத்தை இயக்கி திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனராக இருக்கும் நாக் அஸ்வின் தற்போது பிரபாஸை வைத்து இயக்கியுள்ள புதிய படம் தான் கல்கி 2898 ஏடி. இந்த படத்தில் பிரபாஸுடன் கமலஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் போன்ற பல நடிகர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராமரை தொடர்ந்து கல்கியாக அவதாரம் எடுத்த பிரபாஸ்.! ப்ராஜெக்ட் கே படத்தின் டீசர் வெளியானது.! 1
இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் 2898 இல் நடப்பது போல படமாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்துக்களின் கடவுளாக இருக்கும் விஷ்ணு தனமு பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் எடுக்கும் பொழுது அவர் இந்த உலகத்தை அழிப்பார் என்பதுமக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. எனவே அதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

பிரபாஸுக்கு வில்லனாக கமல் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. கதாயுதத்தை திருடிக் கொள்ளும் வில்லன் அதை தவறான முறையில் பயன்படுத்த அதை அவனிடமிருந்து மீட்பது தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் வில்லனாக கமலஹாசன் நடிக்க இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vyjayanthi Networks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்