Categories: சினிமா

KGF இயக்குனரின் அடுத்த பிரம்மாண்டம்.! ‘சலார்’ படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியானது.!

வெளியிட்டது

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் இரண்டாவது டீசரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த ட்ரெய்லருக்கு ‘ரிலீஸ் ட்ரெய்லர்’ என்று பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் பிரசாந்த் ‘கேஜிஎஃப் 2’ படத்திற்குப் பிறகு இயக்கியிருக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் தான் ‘சலார்’. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தர் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் வெளியாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

KGF இயக்குனரின் அடுத்த பிரம்மாண்டம்.! 'சலார்' படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியானது.! 1
முதலில் இந்த படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் பணிகள் முடிவடையாத காரணத்தினால் படத்தின் வெளியீட்டு தேதியை டிசம்பர் 22ம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தனர். சமீபத்தில் இந்த படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்த நிலையில், தற்போது இரண்டாவது ட்ரெய்லரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். பீரங்கிகள், பிரம்மாண்டமான கோட்டைகள், அணிகலன்கள் என்று பக்கா மாஸான காட்சிகளை சேர்த்து இந்த ட்ரெய்லர் உருவாகி இருக்கிறது. வெட்டுக் குத்து, இரத்தம், துப்பாக்கிச்சூடு, தோட்டா, வெடிகுண்டு என்று அதிரடி காட்சிகளுடன் ட்ரெய்லர் வெளியாகியிடப்பட்டுள்ளது.

‘கேஜிஎஃப்’ படத்தில் தாய் மகன் பாசத்தை எமோஷனாக பயன்படுத்திய பிரசாந்த் நீல், இந்த படத்தில் நண்பர்கள் மூலம் குறிப்பிட்ட சாம்ராஜ்யத்தில் ஏற்பட்ட மாற்றங்களை காண்பித்துள்ளதாக தெரிகிறது. தற்போது வெளியாகி இருக்கும் அந்த ட்ரெய்லரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Hombale Films

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்