கேப்டனை பாத்துக்க எனக்கு தெரியும், உங்க Free அட்வைஸ்-லாம் வேணாம் – பிரேமலதா பதிலடி

கேப்டன் விஜயகாந்த் குறித்து வேதனையுடன் பதிவிட்டு இருந்த இயக்குனர் பாண்டிராஜுக்கு தற்போது பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்திருக்கிறார். “கேப்டனின் மனைவியான தனக்கு அவரை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியும், இது ஒன்றும் சினிமா கிடையாது, வசனம் பேசிவிட்டு செல்வதற்கு, எனவே நீங்கள் கொடுத்த இலவச அறிவுரைக்கு நன்றி என்று இயக்குனர் பாண்டியராஜுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடக்க முடியாமல் வீல்சேரில் அமர்ந்து வந்திருந்தார் விஜயகாந்த். அவரால் கைகளை உயர்த்திக்கூட காட்ட முடியாத அளவிற்கு உடல் மிகவும் நலிவுற்று இருந்தது.

கேப்டனை பாத்துக்க எனக்கு தெரியும், உங்க Free அட்வைஸ்-லாம் வேணாம் - பிரேமலதா பதிலடி 1
அவர் கைகளை உயர்த்தி தொண்டர்களுக்கு கையசைக்க முயற்சிக்கும் போது கூட பின்னால் இருவர் கைகளை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்ததும், தொண்டர்களை பார்த்ததும் எழுந்து நிற்க முயற்சி செய்த விஜயகாந்த் சரிந்து சரிந்து விழுந்ததும் தொண்டர்களுக்கு கண்களில் கண்ணீரை வரவழைத்து இருந்தது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குனர் பாண்டிராஜ், “கேப்டனுக்கு தற்போது சரியான ஓய்வு தேவை, அவர் பூரண குணமடையும் வரை இப்படி எல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள், மிகவும் பிடித்த மனிதரின் இந்த நிலைமையை பார்ப்பதற்கு மிக கஷ்டமாக இருக்கிறது” என்று கண்ணீருடன் பதிவிட்டு இருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஜனவரி 12 இல்ல.! முன்கூட்டியே வெளியாகிறது துணிவு.! அதிகாரபூர்வமாக அறிவித்த போனி கபூர்.!

கேப்டனை பாத்துக்க எனக்கு தெரியும், உங்க Free அட்வைஸ்-லாம் வேணாம் - பிரேமலதா பதிலடி 3
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா, “கேப்டனின் உடல்நிலை குறித்து யூடியூப் சேனல்கள் ஒவ்வொருவரும் செய்தி வெளியிடுவது தொண்டர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக 10×10க்கு அறையில் ஒரு கேமராவையும் ஒரு மைக்கையும் வைத்துக்கொண்டு youtube சேனல்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது கிடையாது. கட்சிக்காரர்கள் அனைவரும் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். ஒரு தட்டு தட்டு விட்டால் பற்றிக் கொள்ளும், இதை நான் மிரட்டுவதற்காக சொல்லவில்லை, ஒரு மனைவியாக என் மனம் என்ன பாடு படும்.? அதேபோல கேப்டன் உடல்நிலை குறித்து சினிமாக்காரர்களில் ஒரே ஒருவர்தான் கருத்து தெரிவித்திருந்தார்.

கேப்டனை பாத்துக்க எனக்கு தெரியும், உங்க Free அட்வைஸ்-லாம் வேணாம் - பிரேமலதா பதிலடி 5
இயக்குனர் பாண்டிராஜிடம் நான் கேட்டுக்கொள்கிறேன், ஏதோ ஒரு பதிவை போட வேண்டும் என்பதற்காக பதிவிடாதீர்கள். இது ஒன்றும் சினிமா கிடையாது. இது எங்களுடைய கட்சி. மேலும் கேப்டன் என்னுடைய கணவர், எங்களுக்கு தெரியும் அவரை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும். உங்கள் இலவச அறிவுரைக்கு நன்றி மிஸ்டர் பாண்டிராஜ்” என்று காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார். அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment