சென்னையில் கீழ்பாக்கத்தில் ஒரு அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்த பிரதாப் போத்தன் தனது வீட்டிற்குள் இன்று காலை இறந்து கிடந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பதற்கு முன் கடைசியாக பேஸ்புக்கில் இரு பதிவுகளை நடிகர் பிரதாப் போத்தன் வெளியிட்டுள்ளது அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1980 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ், மலையாள சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் பிரதாப் போத்தன். சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களையும் இயக்கி உள்ளார். 69 வயதான நடிகர் பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள தன் வீட்டில் இறந்து கிடந்தார். முதலில் நடிகை ராதிகாவையும் அடுத்ததாக அமலா சத்தியராஜ் என்பவரையும் பிரதாப் போத்தன் திருமணம் செய்து இருந்தார். 1986ல் ராதிகாவையும் பின்னர் அமலா சத்யாவை 2012 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் 1978 ஆம் ஆண்டு ஆரவம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் அழியாத கோலங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உட்பட நூறு படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். பின்னர் மைடியர் மார்த்தாண்டம், மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றி விழா, மகுடம், லக்கி மேன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களையும் இயக்கி இருக்கிறார்.அவர் இறப்பு குறித்து பேசிய நடிகை கனிகா, தூக்கத்திலேயே என்னுடைய உயிர் போய்விட வேண்டும் என்று பலமுறை தன்னிடம் கூறி இருந்ததாகவும், தற்போது அவர் முகத்தை பார்க்கும் பொழுது அந்த முகத்தில் சந்தோஷம் இருப்பதால் அவர் ஆசைப்பட்ட படியே அவர் தூக்கத்தில் இறந்து போனதாகவும் கூறினார்.

பிரதாப் போத்தன் இறப்பதற்கு முன்பு இரவு 9:38 மணிக்கு இறப்பை பற்றி பேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். ஜார்ஜ் கார்லின் கூறிய பொன்மொழியான நீண்ட காலமாக சிறிது சிறிதாக உமிழ்நீரை விழுங்குவதன் காரணமாக இறப்பு நிகழ்கிறது என்று பதிவிட்டு இருந்தார். மற்றொரு பதிவில் பிரச்சனைக்கான அறிகுறிகளை அதற்கான மூலகாரணத்தை கண்டறியாமல் சிகிச்சை அளிக்கும் போது நீங்கள் மருத்துவமனையை சார்ந்து இருக்க தொடங்குவீர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் தன்னுடைய இறப்பை முன்கூட்டியே பிரதாப் போத்தன் அறிந்தே இப்படி பதிவுகளை வெளியிட்டு இருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர். அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below video…
Youtube Video Code Embed Credits: Polimer News