யாரையும் அழைக்காமல் கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் செய்து கொண்ட ரோஜா சீரியல் நடிகை.!

வெளியிட்டது

சன் டிவியில் ரோஜா என்கிற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவருக்கு தற்போது மலேசியாவில் உள்ள ஒரு முருகன் கோவிலில் வைத்து திருமணம் முடிந்து விட்டதாக அவரே தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். குடும்பத்தினர் யாரையும் அழைக்காமல் தனது காதலருடன் மாலை மாற்றி அவர் மிக எளிமையாக அந்த திருமணத்தை முடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யாரையும் அழைக்காமல் கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் செய்து கொண்ட ரோஜா சீரியல் நடிகை.! 1

சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடர் தான் ரோஜா. இந்த சீரியலில் ரோஜா என்கிற கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரி. அர்ஜுன் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சிபு சூர்யாவும். ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரியும் நடித்து வந்தனர். இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது.

மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்த இந்த நாடகம் நிறைவடைந்ததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சிபு சூரியன் மற்றும் பிரியங்கா நல்காரி இருவர் செய்யும் ரொமான்ஸ் காட்சிகளுக்காவே ரோஜா தொடரை மக்கள் அதிகமாக பார்க்க தொடங்கினர். மேலும் இந்த நாடகத்தில் வரும் கோர்ட் காட்சிகளுக்காக தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது.

இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கவே செய்கின்றது. மீண்டும் சிபு சூரியன் மற்றும் பிரியங்கா நல்காரி இருவரும் ரோஜா பாகம் 2 வில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சன் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்று இருக்கிறார் நடிகை பிரியங்கா.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்கிற தொடரில் நடித்து வருகிறார் ப்ரியங்கா நல்காரி. இந்த இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்கிற தொடரில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த ஜெய் டிசோசா கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தற்போது சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் தனது காதலரை மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளதாக பகிர்ந்து இருக்கிறார். குடும்பத்தினர் யாரும் இல்லாமல் அவர்கள் இருவரும் மட்டுமே மாலை மாற்றி திருமணத்தை முடித்துள்ளனர்.


ராகுல் வர்மா என்ற தொழிலதிபருடன் அவர்க்கு ரகசியமாக நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவர்கள் திருமணம் நின்றுவிட்டது என்று சமீபத்தில் தகவல் பரவி வந்த நிலையில் மலேசியாவில் வைத்து இருவரும் திருமணத்தை முடித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. குடும்பத்தினர் நண்பர்கள் என யாரையும் அழைக்காமல் மிக எளிமையாக திருமணத்தை முடித்துள்ளார் ப்ரியங்கா. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்