நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஸ்ரீதிவ்யா இந்த படத்தில் கதாநாயகியாக ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். சிவாஜி கணேசனின் பேரனும், பிரபுவின் மகனுமாக இருக்கும் விக்ரம் பிரபு “கும்கி” என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, இது என்ன மாயம், வாகா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டாணாக்காரன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது் இந்த படத்திற்கு பின்னர் சோழர்களின் வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விக்ரம் பிரபு. தற்போது விக்ரம் பிரபு பாயும் ஒளி நீ எனக்கு, பொன்னியின் செல்வன் பாகம் 2, ரெய்டு ஆகிய மூன்று படங்களில் நடித்த முடித்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ரெய்டு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. இந்த நிலையில் படத்தில் இருந்து ட்ரெய்லர் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் முத்தையாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை ஓப்பன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கின்றன. இந்த படத்திற்கு வளர்ந்து வரும் இசையமைப்பாளராக இருக்கும் சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு விருமன் படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையாவே வசனம் எழுதி இருக்கிறார். இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர்கள் பேசிய போது கன்னட படமான டகரு என்கிற படத்தை பார்த்தபோது அவர்களுக்கு பிடித்து விட்டதாகவும், இந்த படத்தை தமிழில் இயக்குமாறு முத்தையாவை அணுகிய போது, அவர் விருமன் படங்களில் பிஸியாக இருந்ததால் அவரது உதவியாளராக இருந்த கார்த்திகை வைத்து இந்த படத்தை இயக்க முடிவு செய்தோம். ஆனால் இந்த படத்திற்கு வசனம் எழுத முத்தையா விரும்பியதால் அவரை இந்த படத்திற்கு வசனம் எழுதியதாக கூறி இருந்தனர்.

மேலும் பேசிய தயாரிப்பாளர்கள் இயக்குனர் கார்த்திகை பார்த்தபோது அவர் மிகவும் இளமையாக இருந்ததாகவும், ஆனால் அவர் கதை சொல்லும் போது நல்ல தேர்ந்த இயக்குனராக தெரிந்ததால் உடனடியாக அவருக்கு ஓகே சொல்லிவிட்டு, இந்த கதைக்கு விக்ரம் பிரபு சரியாக இருப்பார் என்று சொல்லி அவரை அணுகினோம். அவரும் உடனே ஓகே சொல்லிவிட்டார். ஆக்ஷன் படங்களிலேயே சிறந்த ஆக்சன் படமாக விக்ரம் பிரபுவிற்கு இந்த படம் அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் பேசி இருந்தனர். தயாரிப்பாளர்கள் கூறியது போலவே ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த தரமான படமாக ரெய்டு படம் வந்திருக்கிறது. அந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Saregama Tamil