சன் டிவியில் இருந்து விலகி வேறு சேனலுக்கு சென்ற பிரியங்கா நல்காரி.! புது சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஜா.!

வெளியிட்டது

சன் டிவியில் ரோஜா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியங்கா நல்காரி தற்போது சன் டிவியில் இருந்து விலகி வேறு ஒரு சேனலுக்கு சென்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சின்னத்திரைக்கு பெயர் போன சன் தொலைக்காட்சி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுந்தொடர்களை ஒளிபரப்புவதில் முன்னிலை வகித்து வருகிறது. பல நல்ல குடும்ப அம்சத்துடன் கூடிய கதைகளை தேர்ந்தெடுத்து அதை இல்லத்தரசிகளிடம் கொண்டு சேர்த்து அவர்களின் மனதில் சன் டிவி நீங்காத இடம் பிடித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் சிபு சூரியன் ஹீரோவாகவும், பிரியங்கா நல்காரி ஹீரோயின் ஆகவும் நடித்து வந்தனர். மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்த இந்த நாடகம் சமீபத்தில் நிறைவடைந்ததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

சன் டிவியில் இருந்து விலகி வேறு சேனலுக்கு சென்ற பிரியங்கா நல்காரி.! புது சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஜா.! 1

சிபு சூரியன் மற்றும் பிரியங்கா நல்காரி இருவர் செய்யும் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே மக்கள் இந்த தொடரை விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். மேலும் இந்த நாடகத்தில் வரும் கோர்ட் காட்சிகளுக்கென ரசிகர்கள் இருந்தனர். அதே சமயம் இந்த சீரியல் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது. பல லாஜிக் ஓட்டைகள் இந்த சீரியலில் இருந்தது. குறிப்பாக தசாவதாரம் படத்தில் கமலை விஷ்ணுவின் சிலையுடன் கடலில் தூக்கி வீசும் காட்சிகள் போலவே அம்மன் சிலை உடன் ரோஜாவை கட்டி கடலில் வீசும் காட்சிகள் கேளிக்கு உள்ளாகின. அதே போல் பிளாஸ்டிக் சர்ஜரி என்ற பெயரில் நடுரோட்டில் ஒரு பிளாஸ்டிக் முகத்தை வைத்து ஆபரேஷன் செய்த போர் வீடியோவும் இணையத்தில் பெரும் ட்ரெண்டானது. இருந்தாலும் இந்த சீரியலுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கவே தான் செய்தது. இந்த நிலையில் சிபு மற்றும் பிரியங்கா இருவரையும் வைத்து மீண்டும் ரோஜா பாகம் 2 எடுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது சன் டிவியில் இருந்து பிரியங்கா நல்காரி விலகி இருக்கிறார்.

அவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதாராமன் என்ற தொடரின் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நாடகத்தில் ஹீரோவாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்து அசத்தியிருந்த ஜெய் டிசோசா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரியங்கா மீண்டும் சிபு சூரியன் உடன் இணைந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சன் டிவியில் இருந்து விலகி இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. என்ற போதிலும் அவர் ஜீ தமிழில் புது சீரியலில் கமிட்டாக இருப்பதால் பிரியங்காவின் ரசிகர்கள் உற்சாகமாகி இருக்கின்றனர். இந்த நிலையில் சீதாராமன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடகத்திற்கான டெஸ்ட் சூட்டிங் எல்லாம் முடிவடைந்து போட்டோ ஷூட்டும் நடைபெற்று முடிந்து இருப்பது தெரிய வருகிறது. முதல் ப்ரோமோவும் ஜீ தமிழில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்