விஜய் டிவியின் பிரபலமாக வலம் வருபவர் புகழ். இவர் கடந்த வாரம் தனது ஆறு வருட காதலியான பென்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடலூரை சேர்ந்தவர் புகழ். இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளார். ஆனால் அங்கு அவருக்கு ஏதுவும் வேலை கிடைக்காததால், கிடைத்த வேலையை செய்து கொண்டு இருந்துள்ளார். அவருக்கு முடி வெட்ட கூட காசு இல்லாத காரணத்தால், அப்படியே பரட்டை ஆகிப் போனதாக புகழே பல இடங்களில் கூறி இருக்கிறார். அப்படி இருந்த புகழுக்கு கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கெடுக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் வடிவேல் பாலாஜி. ஆரம்பத்தில் பெரும்பாலும் பெண் வேடத்திலேயே நடிப்பார்.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் விட்டு விடக்கூடாது என்பதற்காக பெண் வேடங்கள் என்றாலும் அதில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். பெண் வேடம் இடுவதால் ஆரம்பத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் பல அவமானங்களை சந்தித்து வந்தார் புகழ். பின்னர் உலகம் முழுவதும் பார்க்கும் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர் மேலும் பிரபலமானார். இவரின் உடல் மொழி, முக பாவனைகள், நேரத்தில் இவர் அடிக்கும் கவுண்ட்டர் காமெடிகள் போன்றவை சிரிப்பை வரவழைக்கும். பெரியவர்களை விட குழந்தைகளுக்கு மிக பிடித்தமான நபராக மாறிப் போனார் புகழ். இதனால் இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அஜீத்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் புகழ் பென்சியின் திருமண வரவேற்பு சென்னையில் வைத்து நடைபெற்றது. இதில் விஜய் டிவியின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த வீடியோவை புகழ் தனது youtube பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Parattai Pugazh