கடந்த வாரம் நடந்த ஸ்வீட் ஃபேக்டரி டாஸ்க்கில தனலட்சுமி விதிகளை மீறி நாமினேஷன் ஃபிரீ ஸோனுக்கு சென்றதை கமலஹாசன் எதிர்த்து, அவரிடம் இருந்து அதை பறித்து விக்ரமனுக்கு கொடுத்திருந்தார். இதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட்டாக இருந்தது. கமலின் இந்த செயலை பலரும் பாராட்டி வந்தனர். இந்த நிலையில் இதற்கு உடந்தையாக இருந்த குயின்சி, அமுதவாணன், ரட்சிதா ஆகியோருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக ரட்சிதாவை பலரும் இணையத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர். எதுவுமே தெரியாதது போல் இருந்து கொண்டு திருட்டுத்தனத்திற்கு உடந்தையாக இருந்த ரட்சிதாவை பிள்ளையை விட்டு தொட்டிலையும் ஆட்டுபவர். இந்த சீசனின் விஷப்பாட்டில் ரட்சிதாதான் என்று நெட்டிசனகள் வறுத்து எடுத்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6-சில் பல அதிரடிகளின் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக கமலஹாசன் சீசன் 1ல் பார்த்தது போலவே போட்டியாளர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறார். வார்த்தைகளாலேயே அவர்களை வறுத்தெடுத்து விடுகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த ஃபேக்டரி டாஸ்க் கல்லாப்பெட்டியில் இருக்கும் பணத்தை வைத்து மட்டுமே அவர்கள் அடுத்த வாரம் நாமினேஷன் ஃப்ரீ ஸோனுக்கு செல்கிறார்களா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும். ஆனால் அட தேனடை டீமில் இருந்த விக்ரமன் கல்லாப்பெட்டியில் இருந்த காசை மட்டுமே காட்டி இரண்டாம் இடத்தை பிடித்தார். ஆனால் தனலட்சுமி சிறிது பணத்தை எடுத்து தனது கட்டிலில் ஒளித்து வைத்துவிட்டு மீண்டும் அந்த பணத்தை குயின்சியை வைத்து கல்லாப்பட்டியில் போட்டு விட்டார்.
அப்போது பிக்பாஸ் யார் கல்லாப்பெட்டியில் அதிக பணம் இருந்ததோ அவர்களே வெற்றியாளர்கள் என்று அறிவித்தார். அந்த வகையில் தனலட்சுமியை வெற்றியாளர் என்று அறிவித்தார் பிக்பாஸ். ஆனால் உண்மையில் தனலட்சுமி கல்லாப்பெட்டியில் இருந்ததைவிட விக்ரமன் கல்லாப்பெட்டியில் இருந்த அதிகம். தனலட்சுமி கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை பதுக்கி வைத்துவிட்டு, மீண்டும் கல்லாப்பெட்டியில் சேர்த்ததை கமல் கடுமையாக கண்டித்தார். இந்த விஷயம் தெரிந்திருந்தும், இது விதிமீறல் என்று தெரிந்தும் பேசாமல் இருந்த ரட்சிதா, அமுதவாணன், குயின்சி ஆகியோரையும் கடுமையாக கண்டித்திருந்தார் கமலஹாசன். இந்த இந்த எபிசோடு ஒளிபரப்பான பின்னர் ரட்சிதா, அமுதவாணன், குயின்சி ஆகிய ருக்கு எதிராக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ரட்சிதாவை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். இவர் Safe கேம் ஆடுகிறார் என்றும், இவர் இந்த சீசனின் விஷ பாட்டில் என்றும் ரட்சிதாவிற்கு எதிராக தற்போது இணையத்தில் மீம்ஸ்கள் கொடி கட்டி பறந்து வருகிறது.