பல மிக்சர் போட்டியாளர்களை நாமினேஷனலில் தள்ளிய ஹவுஸ்மேட்ஸ்.! தரமான தேர்வு.!

21 போட்டியாளர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 தற்போது 16 போட்டியாளர்களாக குறைந்துள்ளது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த சீசனில் சுமார் ஐந்து பேர் வெளியேறி இருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் தொடங்கிய முதல் வாரத்தில் எந்த எலிமினேஷனும் இருக்காது. இரண்டாவது வாரத்தில் இருந்து ஒரு ஒருவராக எலிமினேட் செய்யப்படுவர். அந்த வகையில் இரண்டாவது வாரம் ஜி பி முத்து தானாக முன்வந்து வெளியேறிவிட்டார். எனவே அந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக நடன இயக்குனர் சாந்தியை முதல் ஆளாக எலுமினேட் செய்து அனுப்பியது பிக்பாஸ் டீம். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குறைவான வாக்குகள் பெற்று முதல் ஆளாக வெளியேறினார் சாந்தி.

பல மிக்சர் போட்டியாளர்களை நாமினேஷனலில் தள்ளிய ஹவுஸ்மேட்ஸ்.! தரமான தேர்வு.! 1

விளம்பரம்

அவருக்கு பின்னர் பெண்களிடம் தொடர்ந்து கோளாறு செய்து வந்த அசல் கோளாறை மூன்றாவது ஆளாக வெளியே அனுப்பியது பிக்பாஸ் டீம். வெளியே வந்த பிறகு அவர் தன் தவறை உணர்ந்து இனிமேல் இதுபோல் தவறு செய்யமாட்டேன் என்று வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். பின்னர் நான்காவது போட்டியாளராக ஷெரினாவை வீட்டிலிருந்து வெளியே அனுப்பி இருந்தார்கள். இவர் பொம்மை டாஸ்க்கில் கீழே விழுந்த போது தலையில் அடிபட்டதாக கூறி இருந்தார். இதை பலரும் நாடகம் என்று கூறிய நிலையில், அவர் உண்மையில் தனக்கு அடிபட்டதாக கூறியிருந்தார். இது நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பலருக்கும் ஏற்புடையதாக இல்லை. எனவே குறைந்த வாக்குகளை அளித்து ஷெரினாவையும் வீட்டிலிருந்து வெளியேற்றினார்கள்.பல மிக்சர் போட்டியாளர்களை நாமினேஷனலில் தள்ளிய ஹவுஸ்மேட்ஸ்.! தரமான தேர்வு.! 3

தொடர்புடையவை  தாமு சொன்ன ஒரு வார்த்தையால் கதறி அழும் CWC செட்..என்னாச்சு அவருக்கு? | Cook With Comali Season 3

நேற்று ஐந்தாவது போட்டியாளராக வி.ஜே மகேஸ்வரி வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார். நன்றாக கன்டென்ட் கொடுத்து வந்த மகேஸ்வரியை வெளியேற்றியது சரியில்லை என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இருந்த போதும் வேறு வழியில்லாமல் மகேஸ்வரி வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் நாமினேஷனில் மொத்தம் எட்டு பேர் நாமினேட் ஆகியிருக்கின்றனர். கதிரவன், குயின்சி, தனலட்சுமி, ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், அசீம், நிவாஷினி, ஜனனி என மொத்தம் எட்டு பேர் நாமினேஷனில் இருக்கிறார்கள். இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க விரும்பினால் நமது இணையதளத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் சென்று வாக்களிக்கலாம். நமது இணையதளத்தில் ஒவ்வொரு வாரமும் நடக்கும் வாக்கெடுப்பில், நீங்களும் கலந்து கொண்டு வாக்களிக்க கீழே உள்ள லிங்கில் சென்று உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களிக்கவும். https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment