விஜிமாவை இந்த நிலைமையில பாக்க முடியலை – மனம் உடைந்து அழுத ராதா ரவி.!

வெளியிட்டது

கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பேசும் பொழுது ராதாரவி மனம் உடைந்து அழுது இருக்கிறார். “நேர்மையாக அரசியல் செய்தால் விஜயகாந்தின் நிலைமை தான். அவரை என்னால் நேரில் சென்று பார்க்க முடியவில்லை. அவரை பார்க்க விடமாட்டிக்கிறார்கள். இப்பொழுது சிலர் போய் பார்க்கிறார்கள். ஆனால் நான் போய் பார்த்தால் நான் சொல்வது கூட அவருக்குப் புரியுமா? என்று தெரியவில்லை” என்று சொல்லி தனது நண்பனை நினைத்து கண்கலங்கி அழுது இருக்கிறார். அவரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழகத்தில் அரசியல், சினிமா என்று இரண்டு துறையிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் திரு விஜயகாந்த் அவர்கள். 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 29 எம்எல்ஏக்களை பெற்று தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவரானார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜிமாவை இந்த நிலைமையில பாக்க முடியலை - மனம் உடைந்து அழுத ராதா ரவி.! 1

ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதல், கூட்டணி குறித்து எடுக்கப்பட்ட குழப்பமான முடிவுகள் அனைத்தும் தேமுதிகவை சரிவு பாதையை நோக்கி அழைத்துச் சென்றது. பின்னர் வந்த அனைத்து தேர்தல்களிலும் தேமுதிக தோல்வியே சந்தித்தது. தொடர் தோல்விகளால் விஜயகாந்த் மிகவும் முடங்கிப் போனார். அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் தைராய்டு பிரச்சனை காரணமாக அவரால் பேசக்கூட முடியவில்லை. மேலும் பொதுவெளியில் வரும் பொழுது சக்கர நாற்காலியில் தான் வருகிறார். அவர் பெயரில் வெளியாகும் அறிக்கைகளில் கூட கையொப்பம் இல்லாமல் ரப்பர் ஸ்டாம்ப் கையெழுத்தை போட்டு வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.


இந்த நிலையில் விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு வார கால சிகிச்சைக்கப் பின்னர் அவர் டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்திருந்தார். ஆனால் வீட்டிற்கு வந்த மூன்றே நாட்களில் தேமுதிகவின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார் அப்போது சக்கர நாற்காலியில் மேடைக்கு வந்த அவர் பலமுறை நாற்காலியில் இருந்து சரிந்து சரிந்து விழ, அருகில் இருந்த பலரும் அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டே இருந்தனர். இந்த நிகழ்வை பார்த்த பலரும் கண் கலங்கினர். விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் திரைப் பிரபலங்கள் பலரும், “அவரை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர்கள்.? அவருக்கு ஓய்வு கொடுங்கள்” என்று சொல்லி தொடர்ந்து பதிவிட்டு வந்தனர்.


இந்த நிலையில் நடிகர் ராதாரவியிடம் தற்போது விஜயகாந்த் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “சிங்கம் மாதிரி இருந்த மனிதன், அவரை இவ்வளவு துன்புறுத்த வேண்டுமா? என்று என் மனதில் இருக்கிறது. அவரை இப்படி பார்க்க முடியவில்லை. நேரில் சென்று சந்திக்க என்னால் முடியவில்லை. அவரை பார்க்க விட மாட்டேன் என்கிறார்கள். நான் சென்று பார்த்தாலும் நான் பேசுவதெல்லாம் அவருக்கு புரியுமா என்பதே தெரியவில்லை, அவரை துன்புறுத்தாமல் ஓய்வெடுக்க வைக்க வேண்டும். அரசியலில் நேர்மையாக இருந்தால் விஜிமா நிலைமை தான் வரும்” என்று சொல்லி கண்கலங்கி அழுதிருக்கிறார். அவரின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: SS Music

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்