
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வரும் 5-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்தர் இது குறித்து நேற்று நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் வரும் 5 ஆம் தேதி வரை மழை தொடரும் என்றார்.
மேலும், வளிமண்டல அடுக்கில் கீழ் பகுதியில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழகம் இருக்கிறது. எனவே கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்திருந்தது. குறிப்பாக சென்னை அதன் புறநகர் பகுதிகளான காஞ்சீபுரம், வேலூர் மாவட்டங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இடைவெளி விட்டு ஓரிரு முறை மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரியில் வருகிற 5-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.