பெரும் போலீஸ் படைகளுடன் வந்து இறங்கிய சந்தியா.! பயந்து நடுங்கும் சரவணன் மற்றும் சிவகாமி..!

வெளியிட்டது

ராஜா ராணி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சந்தியா தற்போது குடும்பத்தில் ஒருவரை கைது செய்ய இருப்பதாக அந்த ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 தற்போது பரபரப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. பல தடைகளை கடந்து ஐபிஎஸ் அதிகாரியாக ஆகி இருக்கும் சந்தியா தற்போது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கை கையில் எடுத்திருக்கிறார். இதனால் வீட்டில் இருக்கும் யாரையாவது கைது செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி இருக்கிறது. குறிப்பாக சந்தியாவின் மாமியார் சிவகாமியை அவர் கைது செய்வாரா? என்கிற எதிர்பார்ப்பு நிலவி இருக்கிறது. ரவுடி ஒருவரிடம் மாட்டிக் கொண்ட சிவகாமியின் மகள் பார்வதி மற்றும் அவரது கணவரை மீட்பதற்காக சிவகாமி செல்கிறார். அப்போது தனது மகளை பலவந்தப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்த ரவுடியை கட்டையால் அடித்து கொலை செய்து விடுகிறார் சிவகாமி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெரும் போலீஸ் படைகளுடன் வந்து இறங்கிய சந்தியா.! பயந்து நடுங்கும் சரவணன் மற்றும் சிவகாமி..! 1

பின்னர் கொலை செய்த அந்த பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் சிவகாமி முழித்துக் கொண்டிருக்கிறார். அப்போது சிவகாமியை தேடி அங்கு வரும் சரவணன் அந்த பிணத்தை தூக்கிக்கொண்டு ஒரு காட்டில் வைத்து எரித்து விடுகிறார். இந்த வழக்கை உயர் அதிகாரி சந்தியாவிடம் கொடுக்க சந்தியா விசாரணை தொடங்குகிறார். சந்தியாவிற்கு சில துப்புகள் கிடைக்கிறது. அதை வைத்து தனது குடும்பத்தினர் மீது சந்தேகம் கொள்கிறார் சந்தியா. மேலும் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து விசாரணையும் நடத்துகிறார். இந்த நிலையில் சந்தியாவிற்கு தற்போது மீண்டும் குடும்பத்தினர் மீது சந்தேகம் எழ யாரோ ஒருவரை கைது செய்ய முடிவெடுத்து இருக்கிறார் சந்தியா. அந்த பரபரப்பான நிமிடங்கள் வரும் நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அர்ச்சனாவின் மகள் காது குத்து விழா நடைபெறுகிறது.


அந்த விழாவிற்கு சந்தியா வரவில்லை. எல்லோரும் சந்தியாவை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் பெரிய போலீஸ் படைகளுடன் வந்து இறங்குகிறார் சந்தியா. அப்போது சரவணனுக்கு சந்தியா யாரையோ கைது செய்ய வந்திருக்கும் விஷயம் ஓரளவிற்கு புரிகிறது. அவர் சிவகாமி, தங்கை பார்வதி, தங்கையின் கணவர் மூவரையும் அழைத்து இந்த விஷயத்தை கூறிக் கொண்டிருக்கிறார். அவர் காது குத்த விழாவிற்கு வரவில்லை நம் நால்வரில் யாரோ ஒருவரை கைது செய்ய தான் வந்திருக்கிறார் என்று யூகத்தை கூறுகிறார். இதனால் பரபரப்பு எழுந்திருக்கிறது. கொலை செய்த சிவகாமியை கைது செய்வாரா? அல்லது அந்த உடலை எரித்த சரவணனை கைது செய்வாரா? என்கிற எதிர்பார்ப்பு ராஜா ராணி ரசிகர்களிடைய பலமாக எழுந்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்