தன் மகளுக்கு துன்பம் நடந்து விட்டதால் சிவகாமி கொலை செய்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. தனது மகளை வன்கொடுமை செய்ய வந்த வெற்றியை சிவகாமி கொலை செய்துள்ளார். இதனால் சந்தியாவுக்கு அடுத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இது ஏற்கனவே ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 கொடுத்த வெற்றியால் தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சரவணன் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சித்துவும், சந்தியாவாக நடிகை ஆஷா கௌடாவும் நடித்து வருகின்றனர். மனைவியின் கனவை நிறைவேற்ற போராடும் கணவனாக சித்து நடித்து வருகிறார். இனிப்பு கடை நடத்தி வரும் சரவணனுக்கு நன்கு படித்த பெண்ணான சந்தியாவை திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். அவருக்கு ஐபிஎஸ் ஆக வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. பல தடைகளை கடந்து தற்போது ஐபிஎஸ் ஆகியிருக்கிறார் சந்தியா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த கதையிலிருந்து பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் ஆலியா மானசாதான் சந்தியாவாக நடித்து வந்தார். முதலில் அவர் இந்த நாடகத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் ரியா விஸ்வநாதன் நடித்து வந்தார். அவரும் விலகி தற்போது கோகுலத்தில் சீதை நாடகத்தில் நடித்து வந்த ஆஷா கௌடா சந்தியாவாக நடித்து வருகிறார். பின்னர் இந்த கதையில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே அர்ச்சனா விலகினார். பின்னர் இந்த நாடகத்தை இயக்கி வந்த பிரவீன் பென்னட்டும் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது கதைப்படி சந்தியா ஐபிஎஸ் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் கதையில் அடுத்து அடுத்து திருப்பங்கள் நடந்து வருகிறது. அதில் சந்தியா கணவரின் தம்பி செந்திலுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அதை பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணின் குழந்தையுடன் மாற்றி வைத்து விட்டார். தற்போது சந்தியா இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த பிரச்சனை ஒரு புறம் இருக்க, தற்போது சிவகாமியே கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகளின் கணவரை கடத்தி வைத்து மகளை வன்கொடுமை செய்ய வெற்றி என்பவர் முயற்சி செய்கிறார். இதனால் கோபமான சிவகாமி அவர் மண்டையில் அடித்து கொலை செய்கிறார். இதனால் சந்தியாவுக்கு அடுத்து அடுத்து பிரச்சனைகள் உருவாகியுள்ளது. சிவகாமியை கைது செய்வாரா சந்தியா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண.! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television