நீ ஜீவாவை காதலிச்சது எனக்கு தெரியும்..! உண்மைகளை உடைத்த பார்வதி.! அதிர்ச்சியில் உறைந்த காவ்யா.!

ஈரமான ரோஜாவே சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பார்த்திக்கும் ரம்யாவிற்கும் நடக்க இருந்த திருமணம் நின்று விட்டதால் மீண்டும் காவியாவிற்கும் பார்த்திக்கும் திருமண ஏற்பாடுகள் நடத்த பார்த்தியின் தந்தை திட்டமிடுகிறார். ஆனால் காவியா தற்போது அந்த திருமணம் வேண்டாம் என்று தடுத்து விடுகிறார். அந்த ப்ரோமோ வெளியாக இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடர்கின்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கின்றனர். குறிப்பாக பார்த்தி மற்றும் காவியாவின் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே பலரும் இந்த நாடகத்தை விரும்பிப் பார்க்கின்றனர். மனைவி தன்னை எவ்வளவு தூரம் வெறுத்தாலும் அவளை துரத்தி காதலிக்கும் கணவன் கதாபாத்திரத்தில் பார்த்தி இருப்பதால் இந்த ஜோடிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால், அண்ணன் பார்த்திபன் தம்பியின் காதலியான காவியாவை திருமணம் செய்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீ ஜீவாவை காதலிச்சது எனக்கு தெரியும்..! உண்மைகளை உடைத்த பார்வதி.! அதிர்ச்சியில் உறைந்த காவ்யா.! 1

விளம்பரம்

காவியாவின் அக்கா பிரியாவைத்தான் பார்த்திக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது. ஆனால் பார்த்தியின் அத்தை, தனது மகளை பார்த்திக்கு திருமணம் செய்து வைக்கும் நோக்கத்தில் பிரியாவை கடைசி நிமிடத்தில் கடத்தி விடுகிறார். இதனால் வேறு வழியில்லாமல் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணின் தங்கையை திருமணம் செய்து கொள்கிறார் பார்த்தி. ஆனால் காவ்யாவும் பார்த்தியின் தம்பி ஜீவாவும் காதலித்து வந்தனர். கடைசி நிமிடத்தில் பிரியா கடத்தப்பட்டு விட்டதால் வேறு வழியில்லாமல் ஜீவா, அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த அக்கா பிரியாவை திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில் இந்த கதை சில விமர்சனங்களுக்கு உள்ளானது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல இந்த தொடரை பலரும் விரும்பிப் பார்க்க ஆரம்பித்தனர். விருப்பமில்லாமல் பார்த்தியை திருமணம் செய்து கொள்ளும் காவியா, ஒரு கட்டத்தில் அவரைப் புரிந்து கொள்கிறார். அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று மனதளவில் நினைக்கிறார். ஆனால் வெளியில் சொல்லாமல் தவித்து வருகிறார்.

தொடர்புடையவை  ஜேம்ஸ் வசந்தன் மற்றும் ரசிகர்கள் உதவியுடன் தாய்க்கு புது வீடு கட்டிய பிக்பாஸ் தாமரை.! Home Tour Video.!

நீ ஜீவாவை காதலிச்சது எனக்கு தெரியும்..! உண்மைகளை உடைத்த பார்வதி.! அதிர்ச்சியில் உறைந்த காவ்யா.! 3

விளம்பரம்

இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பார்த்தியின் அத்தை தனது மகளை பார்த்திக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை நடத்தி வருகிறார். கடைசி நிமிடத்தில் பார்த்தி-ரம்யா திருமணம் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது பார்த்திக்கும் காவியாவிற்கும் அதே மேடையில் வைத்து திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த திருமணம் வேண்டாம் என்று காவியா மறுத்து விடுகிறார். வீட்டிற்கு வரும் காவியாவிடம் பார்த்தியின் தாயார் நீ ஜீவாவை காதலித்து வந்த விஷயம் எனக்கு தெரியும். ஆனால் இந்த விஷயத்தை பார்த்தியிடம் இப்போதைக்கு சொல்லி விடாதே என்று கூறுகிறார். இதனால் காவியா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார் இவ்வளவு நாள் யாருக்கும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த விஷயம் மாமியாருக்கு எப்படி தெரிந்தது என்று அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார் காவ்யா. இனி அவர் அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..!கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment